அண்மைக் காலமாக பள்ளியின் ஆசிரியர்கள்மீதான
சில பிரச்சினைகைள் வெளிக்கொணரப்பட்டு வருகின்ற ஒரு நிலைமை காணப்படுகின்றது.
மலையகம் உட்பட நாட்டின் பலபிரதேசங்கிலும் மாணவர்களின் நடத்தையில் ஆசிரியர்கள் சிலரது
பார்வைகள் வித்தியாசமான முறையில் படுவதன் காரணமாக ஒழுங்கவிழுமியங்கள்,
சீரான நடத்தைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் அளவுக்கு ஆசிரிய சமூகத்தையே
சந்தேகம்கொண்டு பார்க்கின்ற ஒருநிலைமை சில பிரதேசங்களில் காணப்படுகின்றன.
கடந்த சிலவருடங்களுக்கு முன்னர் மலையத்தின் ஒரு பிரதேசத்தில் நடைபெற்ற
சம்பவம் ஆசிரியர் சமூகத்திற்கே தலைகுணிவை ஏற்படுத்தியிருந்தன. அதேபோல்
வடக்கிலும், கிழக்கிலும் ஒருசில பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்கள், ஒருசில
அதிபர்களின் மாறுபட்ட நடத்தைகள் காரணமாக இந்நிலமை ஏற்பட்டிருக்கின்றன.
ஆனால் ஒட்டுமொத்த கல்விச் சமூகமும் முறைகேடான நடத்தைகளில் ஈடுபடுவதில்லை
என்பதை சமுதாயம் விளங்கிக் கொள்ளவேண்டும்.
மாணவர்களின் வாழ்வில் குறிப்பாக பெண்மாணவிகளின் வாழ்வில் தலையிட்டு பிள்ளைகளின் படிப்பையும், மானத்தையும் இழக்கும் நிலைக்கு காணரமாக அமைகின்ற இவ்வாறான கயவர்கைளக் காண்கின்றபோதும், கேள்விப்படுகின்றபோதும், இவ்வாறான விடயங்கள் சம்பந்தமான தலைப்புக்களில் வெளியாகும் கட்டுரைகளை வாசிக்கின்றபோதும் தன்மனதை பறிகொடுப்பவர்களில் நானும் ஒருவன். ஆதலால்தான் இக்கட்டுரையை வரைகின்றேன். சமுதாயத்தின் நம்பிக்கை கொண்ட ஆசிரியர்கள் இவ்வாறு நடக்கலாமா? அவர்கள் மீது வெறுப்பு உண்டாகிற மாதிரியான செயற்பாடுகளை சிலர் மேற்கொள்கின்றபோது அத்தனை ஆசிரியர்களுக்கும் அல்லவா பழிபாவம் ஏற்படுகிறது. உண்மைதான். இரண்டு லட்சத்து 25ஆயிரத்தையும் தாண்டியுள்ள ஆசிரியர் சமுதாயம் பரந்துபட்ட சுமார் 9731 பள்ளிகளில் தனது சேவைகளை 42இட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களில் தொடர்கின்றபோது பல்வேறு பிரச்சினைகள் எழுகின்றன. அவற்றில் மிகவும் பாரதூரமான சம்பங்களில் மாணவிகளிடம் தகாதமுறையில் செக்ஸ் உணர்வுடன்கூடிய கருத்துக்கள், பார்க்கக்கூடாத படங்கள், அவர்களை உணர்ச்சியூட்டுகின்ற பேச்சுக்கள், வயதிற்குதவாத கருத்துக்களை முன்வைத்து மாணவர்களின் நடத்தையில் கற்றலுக்கான மாற்றத்தை ஏற்படுத்தாது தங்களது இச்சைகளுக்கு உள்ளாக்கும் வண்ணம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்து முனையும் ஆசிரியர்கள் உண்மையிலேயே கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமிருக்காது.
பொதுவாகவே ஆசிரியர்கள் என்போர் பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரையே குறிக்கும். இத்தகைய ஆசிரியர்கள் பல்வேறு பயிற்சிகள் பெறுகின்றனர். இவ்வாறான பயிற்சிகளில் மாணவர்களை கையாளுகின்ற, கற்பித்தல் நுணுக்கங்களையும், உளவியல்சார்ந்த எண்ணக்கருக்களையும் பலதரப்பட்ட விரிவுரையார்கள் ஊடாகப் பெற்று, சிறந்த ஆலோசனை வழிகாட்டல், இன்றைய நவீனதொழில்நுட்பத்துடன் கூடிய கற்றல்முறைகள் மற்றும் மாணவர்களுடன் எவ்வாறு அணுகவேண்டும் போன்றன பற்றியெல்லாம் மிகவும் திறமையாக கற்றறிந்தே பள்ளிக்கு வருகின்றனர். ஆனாலும் வந்தவேகத்தில் சிலகாலம் அவை இருப்பினும் காலம் செல்ல எல்லாம் மறந்து, மீண்டும் முருங்கைமரம் ஏறிய வேதாளத்தின் கதைபோல் சிலரின் செயற்படுகள், நடத்தைக் கோலங்கள், பேச்சுக்கள் சமுதாயத்தையே தலைகுனியவைத்துவிடுகிறன.
அண்மையில் ஒரு பள்ளிக்கு சென்றபோது அப்பள்ளியின் சமூகம் அதாவது பெற்றோர்கள் பலர் அப்பள்ளியிலுள்ள ஆசிரியர் ஒருவர் தரம் மூன்று மாணவர்களிடம் தகாத முறையில் வயதுக்குமீறிய பேச்சுக்களைப் பேசுவதாகவும், அந்தப் பிள்ளைகள் தமது தாய்தந்தையிடம், உறவினர்களிடம் ஆசிரியர் கூறிய விடயத்தைப் பற்றி அதன் கருத்தை அறிய முற்பட்டனர். இவ்விடயம் அதிபரிடம் மாணசீகமாக தெரிவி;க்கப்பட்டு குறித்த ஆசிரியரை தனியாக சந்தித்து இவ்வாறான ஒவ்வாத கருத்துக்களை தவிர்க்குமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டது. பொதுவாகவே ஆசிரியர்களின் நடையுடை, பாவனை, பேச்சுக்களை முற்றுமுழுதாக நம்பக்கூடியவர்களாக மாணவர்கள் காணப்படுவார்கள். ஆரம்பக்கல்விப் பருவத்தைக் கூறுகின்றபோது களிமண்போன்றவர்கள் பிள்ளைகள். அவர்களை சரியான உருவமாக மாற்றவும் முடியும், கோணலான பாத்திரங்களாகவும் படைக்கமுடியும் வகுப்பறை ஆசிரியர்களினால். இதனை சரியான முறையில் பயன்படுத்;தாது தனது இச்சைகளுக்கு அடிமையாக்க முனையும் ஆசிரியர்கள் உண்மையிலேயே அவர்கள் ஆசிரியர்களே அல்லர். கயவர்கள் என்றுதான் கூறவேண்டும். அப்படியானவர்களை சமூகம் இனங்கண்டு தூரவிலக்;கி வைக்கவேண்டும்;.
ஆதால்தான் அடிக்கடி கோட்ட, வலய, மாகாணமட்டத்திலும் சிலவேளைகளில் கல்வியமைச்சு மட்டத்திலும் பல்வேறு கற்றலுக்கான பயிற்சி நடவடிக்கைகளும், மாணவர்களை கையாளுகின்ற முறைகளையும் பற்றியதான பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இருந்திட்டபோதிலும் சில ஆசிரியர்கள் என்கிற பெயரில் உலாவுகின்ற குள்ளநரிக் குணமுள்ளவர்கள் பள்ளிக்குள் எப்படியோ உட்புகுந்து தனக்கு சாதகமாக அதிபர்களைத் தன்கைக்குள் போட்டுக்கொண்டு பின்நேர வகுப்புக்கள் என்கிற ஆதங்கத்தை ஊட்டி மாணவிகளை பாடசாலைக்கு அல்லது டியூசன் நிலையங்களுக்கு அழைத்து தனது குள்ளப்புத்தியை வெளிக்காட்டுகின்ற போதுதான் சமுதாயமும் விழித்துக்கொள்கிறது. அதுவரை சமுதாயமோ? பள்ளியின் சக ஆசிரியர்களோ கண்டும் காணாததுபோல் இருந்துவிடுவதும் இவ்வாறான தப்புத்தண்டங்கள் நடைபெறுவதற்கு சாதகமானதாகவும் அமைந்துவிடுகின்றது. பொதுவாக அதிகமான தப்புக்கள் நடைபெறுவதற்குகந்த நேரங்களையும் பெற்றோர்கள் கவனித்துக் கொள்ளவேண்டும். டியூஷன் நிலையங்களுக்கு செல்லும் பிள்ளைகள் அங்குள்ள பாதுகாப்புக்கள், கற்பிக்கின்ற ஆசிரியர்கள் பற்றிய தகவல்கள், மக்கள் வசிக்கின்ற இடமா?, போக்குவரத்துக்கு இலகுவான இடமா? என்பதையெல்லாம் நன்குணர்ந்து பிள்ளைகளை அனுப்பவேண்டும். பள்ளியிலும் மாலைநேரங்கள், தனியாக வகுப்பறைகளில் காணப்படுதலை தவிர்க்கும் வகையில் அதிபர்கள் கண்காணித்துக்கொள்வதும் தப்புக்கள் நடைபெறுவதிலிருந்து விலகிக் கொள்ள ஏதுவாக அமையும்.
ஆசிரியரது தொழில்தகுதிகள் எவ்வாறு காணப்படவேண்டும் என்பது பற்றி அறிஞரான பிரைஸ் என்பார் இவ்வாறு கூறுகின்றார். 'ஆசிரியர் தொழிலானது ஒரு உயர்திறன்வாய்ந்த தொழிலாகும். ஆசிரியர்களது பண்பை நிர்ணயிக்கும் காரணிகளுள் அவர்களது தெரிவுமுறையானது மிகவும் முக்கியமானதாகும். கண்டகண்டவர்களையெல்லாம் எடுத்து போடும் குப்பைத் மடுவமல்ல' என்று கூறுகின்றார். அதாவது வெறுமனே தொழில் கிடைக்கவில்லை என்பதற்காக வருகின்ற ஒரு தொழில்துறையல்ல ஆசிரியத்துவம். அதுபல்வேறு அம்சங்கள் நிறைந்ததோர் பணி. ஒப்பமிட்டுவிட்டு கொந்தராத்துக்கள், ஏஜென்ட்வேலை மற்றும் சைட்பிசினிஸ் பார்ப்பதற்காக ஆசிரியர் தொழிலை விரும்பியவர்களால்தான் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதற்கு மூலாதாரமாக அமைகின்றன. நாட்டின் சிறப்பான, நாளைய உலகிற்குத் தேவையான நற்பிரஜையை தோற்றுவிப்பதற்காக புறப்பட்ட பணியில் அரசு பலகோடிகளை செலவு செய்து பயிற்றுவித்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளை சிறந்த முறையில் ஒப்புவிப்பதற்கும், அவர்களிடம் பண்புகள், ஒழுக்க விழுமியங்கள், நல்ல பழக்கவழக்கங்களை பெற்றுக்கொள்வதற்காக பள்ளிக்கு அனுப்பிவிட்டு, பெற்றோர் தமதுபிள்ளை நல்லமுறையில் கற்கின்றது என்று மார்தட்டி பேசுகின்றபோது இதுபோன்ற சம்பங்கள் தமது குழந்தைகளுக்கு ஏற்பட்டால் சமுதாயத்தின் பார்வையோ சகல ஆசிரியர்களிடமும் ஒன்றித்துப் போவதில் என்ன தவறிருக்கிறது.
ஆசிரியர் பாத்திரமானது சமுதயாத்திலே மதிக்கப்படுகின்ற ஒரு பாத்திரமாகும். அப்பாத்திரத்தின் தன்மைகள் அண்மைக்காலத்திலிருந்து சற்று கீழ்நோக்கி இறங்கிவருவதாக பலரும் கூறுகின்றனர். ஆசிரியர் தொழில் என்பது ஒருபணியாகவும், சேவையாகவும் கருதப்படுகிறது. ஆனால் இன்று ஆசிரியர் தொழில் வாண்மையை புறந்தள்ளிவிட்டு டியூசன் வழங்குவதிலும், தம்முடைய வேறுதேவைகளுக்குமாக ஆசிரியர் தொழிலைப் பயன்படுத்துவதனால்தான் ஆசிரியர்களை பலகூறுகளாக பிரித்து அவர்களில் ஒருபகுதியினர் 'உதவிகள், ஆலோசனை வழிகாட்டல்கள் என்பன அதிகளவாக தேவைப்படும் ஆசிரியர்களாக' இருக்கின்றனர். இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான தொழில் வழிகாட்டுதல்களை வழங்கவேண்டியது கல்வி உயரதிகாரிகளினது கடமையும், கட்டாயமுமாகும். பள்ளிகளில் மாணவர்களுக்கு உளவளத்துணை இருப்பது போல் ஆசிரியர்களுக்கும் இவ்வாறான உளவளத்துணையின் அவசியம் அடிக்கடி தேவைப்படுகிறது. பெற்றோரிடம் கூறமுடியாத பல விடயங்களையும் ஆசிரியரிடமே மாணவர்கள் கூறுகின்றனர். இதனை சில சபலபுத்தியுடையோர் சாதகமாக பயன்படுத்த முனைகிறபோதுதான் பிரச்சினையே எழுகின்றது.
மாணவர்களது பொறுப்புக்களும், கடமைகளும் சரியாக வழங்கப்படுவதற்கு பாடசாலைகள் முயலவேண்டும். ஆசிரியர் மாணவர் தொடர்புகளின்போது சமூக சமய, விழுமியச் செயற்பாடுகளையும், மாணவர்களிடையே நல்லொழுக்க மனப்பாண்மைகளைக் கட்டியெழுப்பி அவர்களை மிகவும் துணிச்சலுள்ளவர்களாகவும். தையரிமிக்கவர்களாகவும் வளர்த்தெடுத்தல் பெற்றோர், ஆசிரியர்களினதும் கடமையாகும். அப்போதுதான் மாணவர்களிடம் இவ்வாறான ஆசிரியர்கள் காட்டுகின்ற சில்மிஷங்களை வெளிக்கொணரந்து சமுதாயத்தின்முன் புடம்போட வைக்கலாம். சில வருடங்களுக்கு முன்னர் ஆசிரியர் ஒருவர் பள்ளியில் மாணவிகளை ஒவ்வொருவராக அவரது அறையினுள் வரச்செய்து மாணவிகளிடம் சேஷ்டை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். எந்த மாணவியும் வெளியேவந்து எதனையும் கூறத்தயங்கினர். எப்படியோ ஒரு மாணவி விடயத்தைக்கூற அவர் நையப்புடைக்கபட்டு பொலிசில் ஒப்படைக்கப்பட்டார்.
இளம் வயது வாலிபராகட்டும், வயதுசென்ற ஆசிரியராகட்டும் தான் ஒரு சமுதாயத்தின் தலைமகன், வழிகாட்டி, ஒருதந்தை, தாய், மதிக்கப்படுவன், ஒரு ஞானவிளக்கு என்கிற பேறுகளைப் பெற்றவர்களாகவே இருக்கவேண்டும். பள்ளிக்கு உள்ளேயும்சரி வெளியிலும்சரி தான் ஒரு ஆசிரியர் என்கிற நிலையிலேயே காணப்படுதல் வேண்டும். அப்போதுதான் சமுதாயத்திலும் உரிய கௌரவம் கிடைக்கும். மதிக்கவும்படுவார். அதனை எவ்வேளையிலும் உதாசீனம் செய்ய முனையக்கூடாது. அதேவேளை பெற்றோர்கள் தம்முடைய பெண்பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், யாரிடம் கற்கிறார்கள், யார்யார் பாடத்திற்கு வருகின்றார்கள் என்கிற விடயங்களை கேட்டு அடிக்கடி தனது பிள்ளைக்குத் தெரியாமலும், தெரிந்தும் அவதானிக்கவேண்டும். கட்டிளமைப்பருவம் தவறுகள் செய்வதற்குத் தூண்டும் பருவமாகும். பெற்றோரும், பள்ளி ஆசிரியரும் வழிகாட்டிகளாக அமைந்து சரிபிழைகளை பக்குவமாக கூறுகின்றபோது கேட்காமலாவிடும். அமெரிக்க பள்ளியொன்றின் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் 'பிள்ளையின் கற்றலானது சிறப்படைய அல்லது நலிவடைய பாரிய காரணியாக அமைவன ஆசிரியர்களின் மனப்பாங்குகளே' என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே மனப்பாங்கில் மாற்றத்தை ஏற்படுத்த முனையவேண்டும்.
யாரும் தப்புச் செய்யலாம். ஆனால் ஆசிரியர்கள் தப்பே செய்யக்கூடாது என்பதை சாதாரன பொதுமகன்கூட விரும்புகிறான். ஆதலால்தான் ஆசிரியத்துவம் புனிதமானதொருபணி. அன்றைய ஆசிரியர்களை மாணவர்கள் தேடிச்சென்று படித்தார்கள். இன்றைய ஆசிரியனோ மாணவர்களைத் தேடிச்சென்று படிப்பினை விற்கும் காலமாக உருவவெடுத்துள்ளது. தனது குடும்பவறுமை, கஷ்டம் காரணமாக எப்படியாவது தனது பெண்பிள்ளை படித்து தொழில் ஒன்றை பெறவேண்டும் என்பதற்காக இரவுநேரங்களில்கூட வகுப்புநடாத்தும் காலமிது. தனியாக ஆசிரியரும் மாணவியும் சேர்ந்து இருப்பதை தவிர்ப்பது சிறந்தது. இவ்வாறான தப்புத்தண்டங்கள் அடிக்கடி நிகழ்வதற்கு இது போன்ற தனிமைகளும் சாதகமாக அமைந்த சந்தர்ப்பங்கள் பலவுள்ளன.
சிலகாலங்களுக்கு முன்னர் எமது பிரதேசத்தில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடம் பெரியபிரம்பு காணப்படும். முறுக்கியமீசை அவரைக்கண்டால் ஆசிரியர்களுக்கும் நடுக்கம் ஏற்படும். எந்தவிதமான தப்புக்கள் நடைபெற்றாலும் அங்கே எம்ஜியார் பாணியில் நிற்பார். கீழ்மூச்சு மேல்மூச்சு வாங்கிய நிலையில் மாணவர்கள் காணப்படுவர். விசாரணை முடிவில் செம அடிகிடைக்கும். இது சுமார் 30ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் படிக்கின்ற காலத்தில் இருந்த ஆசிரியர்களின் நிலைப்பாடு. ஆதலால்தால் பிரச்சினைகளே எழாது நல்லமுறையில் பாடம்கற்ற காலம் போய் இன்று மனித உரிமைகள் மிகவும் உண்ணிப்பாக அவதானம் செலுத்துகின்ற தற்காலத்தில் தம்முடைய உரிமைகளில் கவனம் செலுத்தி, மற்றவரின் உரிமைகளிலும் கவனம் செலுத்துதல் அவசியமாகும்.
தற்போது தொலைக்காட்சியில் பெண்களின் மீதான துஷ்பிரயோகங்களிலிருந்து தூரவிலகிடுமாறு ஆண்களை எச்சரிக்கை செய்யும் வகையில் விளம்பரங்கள் பல வருகின்றன. மார்க்கத்தில்கூட பெண்களைத் தெய்வமாகவும், அன்பைப் பொழிபவளாகவும், தாயின் பாதங்களில்; சுவர்க்கமுள்ளது என்றும், பெண்கள் மதிக்கப்படல் வேண்டும் எனப் பறைசாற்றிவிடும் இன்றைய உலகில் பெண்மையை அழிக்க முனையும், அல்ல தூஷிக்க நினைக்கும் ஆண் உள்ளங்களின் மத்தியில் ஆசிரியர்களும் சிக்கிவிடும்போதுதான் மிகவும் கவலையான விடயமாகும். அண்மைக்காலங்களில் பல பெண்சிறுமிகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை அறிந்த விடயம்தான். மிக அண்மையில் இந்தியாவில் ஓடும் பஸ்ஸினுள் கயவர்கள் ஒரு பள்ளிமாணவிமீது காண்பித்த கயவஞ்சத்தனம் உலகையே ஒரு குழுக்குக் குளுக்கியது. எது எப்படியோ உலகில் வாழும் அனைத்து மாந்தர்களும் இயற்கையின் பிள்ளைகள். என்பதை கவனத்திற்கொள்தல் வேண்டும்.
எனவேதான் இன்று இந்தியாவில் நடைபெற்றது நாளை நாட்டின் எத்திசையிலும் நடக்கலாம். இதுபோன்ற சம்பவங்கள் கிராமப்புறங்களில் நடைபெறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் காணப்படுகின்றன. ஆனால் நகரங்களில் நடைபெறுவதில்லை என்று சொல்வதற்கும் இல்லை. நகரங்களில் சற்று வெளிப்படையாக பழகுவர். ஆனால் மூடிமறைக்கும் பழக்கம் கிராமத்தில்தான் உள்ளது. எங்கு நடைபெற்றாலும் குற்றம் குற்றமே. உரியவர்கள் தண்டனை பெறுவதிலிருந்து தப்பிக்கக்கூடாது. கல்விப்புலத்தில் சரியானமுறையில் சட்டங்கள் புதிப்பிக்கப்பட்டு அவை போசிக்கப்படவேண்டும். வெறுமனே இடமாற்றம் ஒரு தண்டனையே அல்ல. ஒருசிலரின் சபலத்தன்மை யாவரையும் பாதிக்கக்கூடாது. அவ்வாறானவர்கள் தவறுகளிலிருந்து விடுபடவேண்டும். இல்லையேல் தப்பிக்கவைப்பவர்களையும் மகாஜனங்கள் இனங்கண்டு தக்கபாடம் புகட்டமுனையும் போதுதான் படிப்பினை பெறுவார்கள். தப்புத்தடண்டங்கள் நடைபெறுகின்றபோது அதற்குரிய நீதியான நியாயம் சரியானமுறையில் கிடைக்கவேண்டும். எனவுவேண்டி, கல்வியென்பது 'மாணவர்களிடம் இருக்கின்ற எல்லாத்திறன்களையும், ஆற்றல்களையும் இசைந்து வளர்ச்சியடையச் செய்வதுதான் கல்வியாகும்'. என்பதைக் கவனத்திற்கொண்டு ஆசிரியர்கள் செயற்படுதல் அவசியமாகும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...