மாணவர்களின் வீட்டுப் பாடம், தேர்வுகள்,
நோட்டுப் புத்தகங்கள் ஆகியவற்றில் ஆசிரியர்கள் சிவப்பு மையினால்
திருத்துவது, மாணவர்களின் மனதை மிகவும் பாதிக்கிறதாம். இது லண்டனில்
மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
குழந்தைகள், சிறுவர்களின் நோட்டுப்
புத்தகங்களில் சிவப்பு மையினால் ஆசிரியர்கள் திருத்தம் செய்வது, மனதை
மிகவும் பாதிக்கிறது என்றும், நீல வண்ணம் போன்ற கண்ணை உறுத்தாத வண்ண
மையினால் திருத்தம் மேற்கொள்ளப்படும் போது அது அவ்வளவாகத் தெரிவதில்லை
என்றும் டெய்லி மெயில் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கொலராடோ பல்கலையின் சமூகவியலாளர்கள் ரிச்சர்ட் டியூக்ஸ், ஹீதர் அல்பனெசி ஆகியோர் ஒரு குழுவாக இந்த ஆய்வினை மேற்கொண்டனர்.
சிகப்பு வண்ண மையினால் போடப்படும் திருத்தங்கள் ஆசிரியர்-மாணவர் உறவை மோசமாக்குகிறது; மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கிறது என்று கூறியுள்ளனர்.
கடந்த 2008ல் நூற்றுக்கணக்கான பள்ளிகள், தங்கள் ஆசிரியர்கள் சிகப்பு மை பயன்படுத்துவதைத் தடை செய்துவிட்டன. அது மாணவர்களை அச்சுறுத்துவதாகக் கூறின. ஆனால், உண்மைக் கல்வி இயக்க தலைவர் கிரிஸ் மெக்கவர்ன் இந்த ஆய்வு முடிவுகளை கேலி செய்துள்ளார். என்னுடைய 35 வருட பணியில் பெரும்பாலான மாணவர்களும் தங்கள் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் திருத்தங்களை உன்னிப்பாகக் கவனிக்க சிவப்பு மையே சிறந்தது. அதைத்தான் மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதை அறிவேன் என்றார்.
இது ஒரு முட்டாள்தனமான ஆய்வாகத் தெரிகிறது. பச்சை அல்லது நீல நிற மை, அவ்வளவு தெளிவாகத் தெரியாது என்றார்.
சிகப்பு என்ற வண்ணம், எச்சரிக்கை, பாதுகாப்பு, கோபம், தடுப்பு உள்ளிட்ட மன எண்ணங்களை வெளிப்படுத்துகிறது என்பது கொலராடோ பல்கலையின் ஆய்வு முடிவு.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...