அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜனவரி 5-ல் நடந்த குறுவள மைய கலந்தாய்வு கூட்டத்தில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட், அரசின் கவனத்திற்கு சென்றது தமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது. மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே நாளில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, இக்கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதனால், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில்பங்கேற்க முடிவு செய்து, தற்செயல் விடுப்பு எடுத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதிகாரிகள் விசாரணையில், 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தெரிந்தது. இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு மேற்கொள்ளப்படும்,&'&' என்றார். சங்க நிர்வாகிகள் கூறுகையில்,"எங்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறைந்தது 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,&'&' என்றனர்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஜனவரி 5-ல் நடந்த குறுவள மைய கலந்தாய்வு கூட்டத்தில் 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட், அரசின் கவனத்திற்கு சென்றது
ReplyDeleteதமிழகத்தில், பள்ளி வேலை நாளில், தற்செயல் விடுப்பு (சி.எல்.,) எடுத்து போராட்டத்தில் பங்கேற்ற 38 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களின் பெயர் பட்டியலை, தொடக்க கல்வி துறை தயார் செய்துள்ளது.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்; பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மாவட்டங்களிலும், தொடக்கபள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஜன.,5ல் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதே நாளில், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில் ஆசிரியர் பள்ளித் தொகுப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. போராட்டம் காரணமாக, இக்கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஆசிரியர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனால், அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில்பங்கேற்க முடிவு செய்து, தற்செயல் விடுப்பு எடுத்து, கலந்தாய்வுக் கூட்டத்தை புறக்கணித்தனர். அதிகாரிகள் விசாரணையில், 38 ஆயிரம் ஆசிரியர்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது தெரிந்தது.
இதுபற்றி தொடக்க கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று முடிவு மேற்கொள்ளப்படும்,&'&' என்றார்.
சங்க நிர்வாகிகள் கூறுகையில்,"எங்கள் போராட்டம் அரசின் கவனத்திற்கு சென்றுள்ளது. குறைந்தது 6 கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,&'&' என்றனர்.