நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில்
மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு
செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட
இருக்கின்றனர்.
மேலும், புதிய வங்கி மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேறி
விட்ட நிலையில், புதிய தனியார் வங்கிகள் தொடங்குவதற்கான உரிமம்
அளிப்பதற்கான நடைமுறைகளை ரிசர்வ் வங்கி வேகப்படுத்தி உள்ளது. அடுத்த 4
முதல் 6 வாரங்களுக்குள் அதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவிக்க
உள்ளது. இதனால், அடுத்த நிதி ஆண்டான ஏப்ரல் முதல் புதிய வங்கிகள் தொடங்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளன.
எனவே, புதிதாக தொடங்கப்படும் வங்கிகள் மூலம் இந்த
ஆண்டில் சுமார் 50 ஆயிரம் பேருக்கு வங்கிப் பணியில் சேரும் வாய்ப்பு
கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும்
சுமார் ஒரு லட்சம் பேர், வங்கிகளில் வேலை பெறுவார்கள் என புள்ளிவிவரங்கள்
தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...