Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கவனிக்க தவறிய இந்திய கணித மேதை காப்ரேகர்


     பூச்சியத்தை கண்டறிந்து கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர், பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ் அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள்  செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம்
 
பிறப்பும் இளமைபருவமும்
காப்ரேகர் 1905 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி மும்பாய்க்கு அருகில் தஹானூ என்னுமிடத்தில்  இராமசந்திர தேவகாப்ரேகருக்கும் ,ஜானகிபாய் என்பவருக்கும் மகனாய் பிறந்தார் . தந்தை ஜாதக தொழில் செய்து வந்தாலும் குடும்பம் என்னவோ  ஏழ்மையில் சிக்கிதவித்தது தனது 8 வயதில் தாயை இழந்த காப்ரேகர்  தன் மாமாவின் அரவணைப்பில் உயர்நிலைப்பள்ளி படிப்பை தொடர்ந்தார்  வகுப்பில் மிக சாதாரண மாணவனான காப்ரேகருக்கு கனித ஆசிரியரை மட்டும் மிகவும் பிடித்து போனது .கணித ஆசிரியரின் புதிர்கணக்குகளும் , சுருக்குவழிகளும் எண்கணிதத்தில்  ஈடுபாட்டை வளரச்செய்தது  தனது தந்தை ஜாதக தொழில்  இருந்ததால் ஜாதக கணிதத்தின் மீதும் ஆர்வம் வந்தது .
ஆசிரியர் பணி
மும்பையின் அருகே உள்ள தேவ்லாலி என்னும் ஊரில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியாராக 1930 முதல் 1962 வரை முப்பதாண்டுகள் பணிபுரிந்தார் 1932 இல் இந்திராபாய் என்பரை திருமணம் செய்து கொண்டார்.  பள்ளியில் கணக்கு ,அறிவியல் ,சமஸ்கிருதம் ஆகியவற்றை கற்பித்தார்
கணிதத்திற்கு ஆற்றிய தொண்டுகள்
கணிதத்தில் முதுகலைபட்டம்கூடா பெறாத ஒரு சாதரண பள்ளி ஆசிரியரான காப்ரேகரின் கணித சமன்பாடுகளை கொண்டு இன்று பலர் ஆராய்ச்சியாளர் பட்டம் பெற்று  வருகின்றனர் .தனது கணித ஆராய்ச்சிக்காக யாரிடம் சென்று உதவி கேட்டதில்லை தனி ஒரு மனிதனாக நின்று கல்லூரிகளுக்கும் பல்கலைகழகங்களுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றினார் தனது ஆராய்ச்சிக்கட்டுரைகளை இந்திய மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சி சஞ்சிகைகளில் வெளியிட்டார் .என்கணித குறிப்புகள் பலவற்றை கொண்டு சில நூல்களையும் எழுதியுள்ளார் . விஜயாஎண்கள் , மந்திஎண்கள் , தாத்ரேய எண்கள் ,ஹர்ஷத்எண்கள்,டெம்லோ எண்கள்,பல்வேறு மாயசதுரங்கள் என விளையாட்டுக்கணிதம்எனும் Recreational Mathematics பிரிவில் பல புதிர்களையும் அவற்றிற்கான விடைகளையும் காணுவதிலே தம் வாழ்நாள் முழுவதையும் செலவிட்டார் . இராமனுஜத்திற்கு ஒரு ஹார்டி தேவைப்பட்டதைப்போல  காப்ரேகருக்கும் ஒருவர் தேவைப்பட்டார் அவர்தான் மார்டின் கார்ட்னர் . பொழுதுபோக்கு கணிதம்எனும் கணித துறையில் புகழ்பெற்ற மார்டின் கார்ட்னர் காப்ரேகரை புகழ்ந்து Scientific Americanஎனும் பத்திரிக்கையில் புகழ்ந்து எழுதியபிறகுதான் உலகம் முழுவதும் காப்ரேகர் கவனிக்கப்பட்டார்  .ஸ்வீடனில் வெளியான கணித அறிஞர்களின்  பட்டியலில் ஒரு சிறந்த கணித விஞ்ஞானி என போற்றப்பட்டார் 
நன்றி  திரு குரு.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive