கடந்த 1986ம் ஆண்டு, நிப்ட் மையம் டெல்லியில் மட்டுமே ஒன்று இருந்தது.
ஆனால், தற்போது அந்த எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. வடகிழக்கே, மேகாலயா
மாநிலம் ஷில்லாங்கிலிருந்து, தென்மேற்கே கேரள மாநிலம் கண்ணூர் வரையிலும்,
புபனேஷ்வரிலிருந்து, இமாச்சல பிரதேசம் கங்ரா வரையிலும், நிப்ட் மையங்கள்
பரவியுள்ளன.
படிப்பு விபரங்கள்
நிப்ட் மையங்கள் வழங்கும் படிப்புகள், வழக்கமான பழைய படிப்புகளான பேஷன்
மற்றும் டெக்ஸ்டைல் டிசைன் ஆகியவற்றை தாண்டி, தொழில்நுட்பம் மற்றும்
மேலாண்மை சார்ந்த படிப்புகளும் வழங்கப்படுகின்றன. இவை பேஷன் படிப்புடன்,
துணைப் பாடங்களாக வழங்கப்படுகின்றன.
மேலும், கீழ்காணும் படிப்புகளுக்கு, நிப்ட் கல்வி நிறுவனம், தனது சொந்த பட்டங்களை வழங்குகிறது. அவை,
பேச்சுலர் ஆப் டிசைன்(B Des.)
இது 4 வருட படிப்பாகும். இதில், பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன் மற்றும் பேஷன் கம்யூனிகேஷன் போன்ற அம்சங்கள் அடங்கும்.
இது 4 வருட படிப்பாகும். இதில், பேஷன் டிசைன், லெதர் டிசைன், அக்சசரி டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், நிட்வேர் டிசைன் மற்றும் பேஷன் கம்யூனிகேஷன் போன்ற அம்சங்கள் அடங்கும்.
பேச்சுலர் இன் பேஷன் டெக்னாலஜி(B.F.Tech)
அப்பாரல் ப்ரொடக்ஷன். இது 4 வருட படிப்பாகும்.
அப்பாரல் ப்ரொடக்ஷன். இது 4 வருட படிப்பாகும்.
மாஸ்டர் ஆப் டிசைன்(M.Des) - டிசைன் ஸ்பேஸ்
எம்.எப்.,டெக் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் டெக்னாலஜி
எம்.எப்.எம் - மாஸ்டர்ஸ் இன் பேஷன் மேனேஜ்மென்ட்.
எவ்வாறு விண்ணப்பிக்கலாம்?
இந்த 2013ம் ஆண்டில், நிப்ட்.,ன் 2,600 இடங்களுக்கு, 20 ஆயிரத்திற்கும்
மேற்பட்டோர் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால்,
இந்தாண்டு, மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு
அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில், இதன்மூலம், விண்ணப்பத்திற்கு ஆகும்
தேவையற்ற செலவை தவிர்க்கலாம். பொதுப் பிரிவுக்கு ரூ.1,100ம், SC/ST/PHP
பிரிவுக்கு ரூ.550ம் விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றன.
படிப்பு பற்றிய அனைத்து விபரங்களையும் கொண்ட Prospectus -ஐ, டவுன்லோடு செய்ய www.applyadmission.net/nift2013/Prospectus2013.pdf.
என்ற இணையத்தளம் செல்ல வேண்டும். இளநிலைப் படிப்பை மேற்கொள்ள அதிகபட்ச
வயதுவரம்பு 23. ஆனால், முதுநிலைப் படிப்பை மேற்கொள்ள அதிகபட்ச வயதுவரம்பு
கிடையாது.
மாணவர்களுக்கு அழைப்பு
நகர்ப்புறங்களில் மட்டுமில்லாமல், தொலைதூரப் பகுதிகளிலிருந்தும்,
மாணவர்களை ஈர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வு ஆங்கில
மொழியில் நடத்தப்பட்டாலும், ஒருவரின் படைப்புத்திறனை வெளிப்படுத்துவதற்கான
வாய்ப்புகள் வழங்கப்படும்.
நுழைவுத்தேர்வு எப்படி?
இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள், 2
பிரிவுகளில், பேப்பர் வழியிலான தேர்வுகளை எழுத வேண்டும். General Ability
தேர்வானது(GAT), Quantitative ability, Communication ability, English
comprehension, Analytical ability, General knowledge and Current affairs
போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும்.
Creative Ability தேர்வானது(CAT), உங்களின் படைப்பாக்க மற்றும்
புத்தாக்க திறன்களை சோதிக்கிறது. வண்ணம் மற்றும் விளக்குதல் ஆகிய அம்சங்கள்
மூலம் இது சோதிக்கப்படுகிறது.
மேற்கூறிய 2 தேர்வுகளில், செயல்பாடு கணக்கிடப்பட்டு, 6,000 மாணவர்கள்
தேர்வு செய்யப்படுவார்கள். இவர்கள், Material handling test என்ற ஒரு
தேர்வில் பங்குகொள்ள வேண்டும். இந்த தேர்வில், மாணவர்களுக்கு
மெட்டீரியல்கள் வழங்கப்படும். அதை வைத்து, கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற
மாடலை அவர்கள் உருவாக்க வேண்டும்.
இளநிலை மற்றும் முதுநிலைகளில், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை
படிப்புகளுக்கு நடத்தப்படும் GAT தேர்வானது, கூடுதல் அம்சங்களைக்
கொண்டுள்ளது. இது கேஸ் ஸடடி ஆகும் ஆனால் கிரியேடிவ் டெஸ்ட் அல்ல. அனைத்து
முதுநிலைப் படிப்புகளிலும் சேர, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு
ஆகியவற்றை கடக்க வேண்டும். இவற்றுக்கு 30% வெயிட்டேஜ் மதிப்பெண்கள் உண்டு.
என்.ஆர்.ஐ மற்றும் சர்வதேச மாணவர்கள், SAT மற்றும் GMAT மதிப்பெண்களை வைத்து விண்ணப்பிக்கலாம்.
படிப்புகளை அறிதல்
பேஷன் டிசைன் தொழிலைப் பற்றி சில விஷயங்களை அறிந்திருக்கும்
மாணவர்களுக்கு, இத்துறையின் வேறுசில அம்சங்கள் குறித்தும் சிறிது
புரிந்துணர்வு இருக்கும். இளநிலை பேஷன் டெக்னாலஜி படிப்பிற்கான தகுதிகள்,
டிசைன் படிப்புகளைப் போலன்றி வேறுபட்டவை. பேஷன் டெக்னாலஜி படிப்பில் சேர,
பள்ளிப் படிப்பில், இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் போன்றவை
படித்திருக்க வேண்டும். இந்த மாணவர்கள், கார்மெண்ட் தொழில்நுட்ப
வல்லுநர்களாக, குவாலிட்டி அசூரன்ஸ் மற்றும் இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங்
ஆகியவற்றில் பணிபுரிகிறார்கள்.
பேஷன் கம்யூனிகேஷன் படிப்பானது, கிராபிக் டிசைன், விசுவல்
மெர்க்கண்டைசிங், ரீடெய்ல் ஸ்பேஸ் டிசைன், ஸ்டைலிங் அண்ட் போட்டோகிராபி
மற்றும் பேஷன் ஜர்னலிசம் போன்ற பலவிதமான துறைகளில் ஈடுபட, மாணவர்களுக்கு
பயிற்சியளிக்கிறது.
பேஷன் மேனேஜ்மென்ட் முதுநிலைப் படிப்பானது, ரீடைல் மற்றும் பேஷன்
தொடர்பான துறைகளில் ஒரு புகழ்பெற்ற படிப்பாக விளங்குகிறது. மாணவர்கள், ஒரு
கல்வி நிலையத்தில், ஒரு குறிப்பிட்ட படிப்பில் சேர்வதற்கு முன்னர், அனைத்து
விபரங்களையும் முடிந்தளவு தெளிவாக அறிந்துகொண்டு, அதன்பிறகே, இதர
முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
நிப்ட் -ன் டைரக்டர் ஜெனரல் பிரேம் குமார் கெரா அளித்தப் பேட்டி;
நிப்ட் நுழைவுத் தேர்வுக்கு சிறப்பாக தயாராவது எப்படி?
ஒவ்வொரு படிப்பிற்கும் தேவையான மாணவர்களின் திறன்களை சோதிக்கும்
வகையில், நிப்ட் தேர்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. டிசைன் துறையைப்
பொறுத்தவரை, டிசைனிங் திறன், படைப்பாற்றல் மற்றும் உபகரணங்களை கையாளும்
நுட்பம் போன்றவை சோதிக்கப்படுகின்றன.
இளநிலை டெக்னாலஜி படிப்பை பொறுத்தவரை, ஜெனரல் எபிலிட்டி டெஸ்ட் என்ற ஒரு
தேர்வு நடத்தப்படுகிறது. முதுநிலைப் படிப்பை பொறுத்தவரை, மாணவர்கள், குழு
கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும். இந்த கல்வி
நிறுவனம், எந்த கோச்சிங் ப்ரோகிராம் அல்லது நுட்பத்தையும்
பரிந்துரைப்பதில்லை.
மையம் அல்லது படிப்பை ஒதுக்குதல் எவ்வாறு நடைபெறுகிறது?
இது முழுவதும் மெரிட் அடிப்படையிலும், கவுன்சிலிங்கின்போது, ஒரு
மாணவரின் விருப்பத்தின் அடிப்படையிலுமே நடைபெறுகிறது. படிப்பைத்
தேர்ந்தெடுக்க, மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் உதவி புரிகிறார்கள்.
நிப்ட் வேலை வாய்ப்புகள் எப்படி?
கேம்பஸ் இண்டர்வியூ செயல்பாட்டில், நிப்ட் ப்ளேஸ்மென்ட் செல் உதவி
செய்கிறது. கடந்த 2012ம் ஆண்டு, முதுநிலைப் படிப்பிற்கு கிடைத்த வேலை
வாய்ப்பில் சராசரி ஆண்டு வருமானம் ரூ.3.32 லட்சம் என்ற அளவிலும், இளநிலைப்
படிப்பிற்கு ரூ.2.73 லட்சம் என்ற அளவிலும் இருந்தது. பல பிரபல நிறுவனங்கள்,
மாணவர்களை பணியமர்த்திக் கொண்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...