பிற்படுத்தப்பட்ட நலத்துறை வழங்கும் உதவித்தொகை பெறுவதற்கு, மதிப்பெண்
நிர்ணயம் செய்யப்பட்டதில், பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதால், மாணவியர்
அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, பிளஸ் 2 வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில், முதல், 500 மாணவர்களுக்கு, உதவித்தொகை வழங்கப்படும். மாணவர்கள் பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடிக்கும் வரை, மாதம், 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
பொதுத் தேர்வில், மாணவர்கள், 1,167 மதிப்பெண்களுக்கும், மாணவியர், 1,168 மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும் என, மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, மாணவர்களை விட மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மதிப்பெண் நிர்ணயித்திருப்பது, மாணவியரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து, பெயர் குறிப்பிடாத பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு நடந்த, பிளஸ் 2 பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண்கள் பெற்ற, 250 மாணவர்களுக்கும், 250 மாணவியருக்கும் உதவித்தொகை வழங்க முடிவு செய்திருந்தாலும், மதிப்பெண்கள் நிர்ணயிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது. இரண்டு தரப்புக்கும் ஒரே மதிப்பெண்கள் நிர்ணயிக்க முடிவு செய்தோம்.
ஆனால், மாணவர்களை விட, மாணவியரின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருந்தது. எனவே, மாணவர்களை விட, மாணவியர் ஒரு மதிப்பெண் அதிகம் பெற்றிருக்க வேண்டும் என, தகுதியை வரையறுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...