மாணவர்களுக்கு டியூஷன் எடுக்க புதிய ஆசிரியர்களுக்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகத்தில் முதல் கட்டமாக
ஜூலை மாதம் நடந்தபோது 2,800 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவதாக நடந்த
துணைத் தேர்வில் 17,000 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 19,343 பேருக்கு
பணி வழங்கப்பட்டது.
இவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி மையங்களில்(டயட்) இந்த பயிற்சி இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு: அனைத்து மாணவர்களிடமும் அன்புடன் பழகுதல், வேறுபாடு பார்க்காமல் நடுநிலையுடன் நடத்தல், மாணவர்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்துதல் ஏற்படாத வகையில் நடத்தல், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் அச்சுறுத்துவதை தவிர்க்க வேண்டியது அவசியம்.
மாணவர்களுக்கு கற்பிக்கும் போது நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து அவர்களுடன் எப்படி உரையாடுவது, சக ஆசிரியர்களிடம் கண்ணியமாகவும், மரியாதையுடனும் நடந்து கொள்வது, உள்ளிட்டவை சொல்லித்தர வேண்டும்.
ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் யாரிடமும் நன்கொடை வாங்கக் கூடாது, மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு டியூஷன் நடத்தக் கூடாது, பள்ளியில் உடன் பணியாற்றுவோர் மீதும், உயர் அதிகாரிகள் மீதும் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எம்.பில்., பி.எச்டி., பட்டங்களைப் பெற்றிருந்தாலும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியஉயர்வு:அரசாணை வெளியீடு
ReplyDeleteபட்டதாரி ஆசிரியர்கள் எம்.எட். படிப்பிற்குப் பதிலாக எம்.பில்., பி.எச்டி. பட்டங்களைப் பெற்றிருந்தாலும் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வைப் பெறலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ., எம்.எஸ்சி., தேர்வு பெற்ற பிறகு முதல் ஊதிய உயர்வைப் பெறுகின்றனர். அவர்கள் ஆசிரியர்களாகவோ, தலைமையாசிரியர்களாகவோ பணிபுரியும்போது எம்.எட் பட்டம் பெற்றிருந்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு வழங்க ஆணையிடப்பட்டிருந்தது.இந்த நிலையில், பல்கலைக்கழகங்களில் தொலைநிலைப் பாடப்பகுதிகளில் எம்.எட். பட்டத்தை நீக்கிவிட்டன. இதையடுத்து, அவர்கள எம்.எட். கல்வித் தகுதியை பெற முடியாத சூழல் உள்ளது.
எனவே, இப்போது எம்.பில். அல்லது பி.எச்டி. பட்டம் மட்டுமே தொலைநிலைக் கல்வி நிறுவனங்களில் பெறும் சூழல் நிலவுகிறது. பட்டதாரி ஆசிரியர் மொத்த பணிக் காலத்தில் 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில், இரண்டாவது ஊக்கத் தொகை பெற தகுதியான உயர் கல்வி எம்.எட். மட்டுமே என்பதை மாற்ற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.இவர்களது கோரிக்கையைப் பரிசீலித்த தமிழக அரசு, இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற உயர் கல்வி தகுதியாக எம்.எட் மட்டுமே என்பதற்குப் பதிலாக, எம்.எட். அல்லது எம்.பில் அல்லது பி.எச்டி. பெற்றிருந்தாலும் அதை உயர் கல்வியாகக் கருதி ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.எனினும், ஒரு ஆசிரியரின் பணிக்காலத்தில் அதிகபட்சமாக 2 ஊக்க ஊதிய உயர்வுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.