ஆண்டிராய்டு மொபைல்போனில் தமிழில் எழுத சில மென்பொருள்கள் கிடைக்கின்றன.
ஆனால் அதில் எழுதி பழகினால் நமக்கு தமிழே மறந்துவிடும் அந்த அளவுக்கு
கஷ்டப்படுத்தும். நான் செல்லினம் என்ற மென்பொருள் பயன்படுத்தி பார்த்தேன்
மிகவும் அருமையாக உள்ளது. அந்த மென்பொருளை பற்றி இங்கே பார்ப்போம்.இதை கொண்டு எளிதாக தமிழ் வார்த்தைகள் டைப் செய்வது மிக எளிது .
நாம் கணினியில் கூகிள் தமிழ் இன்புட் பயன்படுத்தி எழுதுவது போல மிக எளிமையாக உள்ளது. ஆங்கிலதில் எழுதினால் தமிழில் சொற்கள் கிடைக்கும். குறிப்பாக ஆரம்ப எழுத்தை தொடங்கும்போதே பிரபலமான சொற்கள் கிடைகின்றன. இந்த மென்பொருளை பயன்படுத்தினால் இனிமேல் பேஸ்புக், கூகிள் + போன்ற சமுக வலைத்தளங்களில் சாட்டிங் செய்ய சிரமம் இருக்காது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...