பெண்களிடம், சுயஉதவி குழு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்த தகவல்களை
சேகரிக்கும் பணியில், மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதற்கான களப்பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் குறித்த விழிப்புணர்வை, பொதுமக்களிடம்
ஏற்படுத்தும் வகையில், பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக, மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்களிடம்
ஏற்படுத்தியுள்ள மாற்றம், பொருள்கள் தயாரிப்பில் உள்ள குறைபாடுகள், களைய
எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கும் பணியில்,
மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இதற்கான களப் பணியில், பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி, சென்னை
பல்கலைக்கழகத்தை சேர்ந்த மேலாண்மை கல்வி படிக்கும் மாணவர்கள்,
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள், சுய உதவி குழுக்களால் பெண்களின்
வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ளதா, உற்பத்தி பொருள்களில் உள்ள
குறைபாடுகள், தரம் உயர்த்த மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்டவை
குறித்த தகவல்களை சேகரிக்க பணியில், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
முதல் கட்டமாக, புது வாழ்வு திட்டம், மகளிர் திட்டத்தின் கீழ்
செயல்படும், பெரம்பலூர், விழுப்புரம், திருவள்ளுர், திருவண்ணாமலை, கடலூர்,
காஞ்சிபுரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பெண்களிடம்,
மாணவர்கள் விவரங்கள் சேகரிக்கின்றனர்.
இவர்கள், புகைப்படங்களாகவும், குறும்படங்களாகவும் தங்கள் தகவல்களை பதிவு
செய்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவன
அதிகாரிகள் கூறியதாவது: முதல் கட்டமாக, 30 மாணவர்கள் களப்பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஊக்கத்தொகையாக, 10 ஆயிரம் ரூபாய்
வழங்கப்படுகிறது.
இவர்கள் மாவட்டங்களில் தங்கியிருந்து, களப்பணியில் ஈடுபடுகின்றனர்.
யுனிசெப் நிறுவனமும், இப்பணியில் இணைந்துள்ளது. மாணவர்களிடம், முழு
தகவல்களை அறிவிக்கப்பட்டு, களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள்
அளிக்கும் தகவல்களின் அடிப்படையில், மகளிர் திட்டத்தில் மாற்றங்கள்
மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...