சென்னையில் செயல்பட்டு வரும் டீச்சர்ஸ் லேப் அமைப்பு ஆசிரியர் பணியில் ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து டீச்சிங்ஃபெல்லோஷிப் என்ற பயிற்சித் திட்டத்தின் மூலம் பயிற்சி அளித்து பணி வழங்கி வருகிறது.
இந்த அமைப்பு மூலம் பயிற்சி பெற்று ஆசிரியராக பணியாற்ற விரும்பம் உள்ளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 35 வயதுக்குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.
பயிற்சி காலம்: 2 முதல் 12 மாதங்கள்
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறை, அவர்களுடன் பழகும் விதம், ஆக்கப்பூர்வமான செயல்களைத் தூண்டும் வகையிலான கல்வி முறை, மாணவர்களிடையே நடந்து கொள்ளவேண்டிய வழிமுறை உள்ளிட்ட பலதரப்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
பயிற்சியின் ஆரம்ப காலத்தில் மாதம் ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 7 ஆயிரம் வரை உதவித்தொகை அளிக்கப்படும்.
உரிய பயிற்சிக்குப் பிறகு, ஸ்ரீராம் அறக்கட்டளையால் சென்னை மற்றும் ஆந்திர மாநிலங்களில் நடத்தப்படும் பள்ளிகளிலும், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூவர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள டீச்சர்ஸ் லேப்புக்குச் சொந்தமான பள்ளிகளிலும் ஆசிரியர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள். ஆசிரியர்களாக பணி அமர்த்தப்பட்ட பிறகு, தகுதி மற்றும் பணிக்கேற்ப மாதந்தோறும் ஊதியம் வழங்கப்படும்.
கல்லூரிப் படிப்பை சமீபத்தில் முடித்தவர்களும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.02.2013
விவரங்கள் அறிவதற்கான தொலைபேசி எண்: 044-24527644
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.theteacherslab.org.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...