அரசு பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகளின்
கல்வியை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்த, ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி
அளிக்கப்படுகிறது.
மாற்றுத் திறனாளிகளுக்கென, தனியாக கல்வி
நிறுவனங்கள் செயல்பட்டாலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்
மற்ற மாணவர்களுடன் இணைந்து படிக்கும் மாற்றுத் திறனாளிகளின் கல்வியை
மேம்படுத்தும் வகையில், "மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான உள்ளடங்கிய கல்வி"
எனும் திட்டம் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகளின் பாதிப்பு
நிலைக்கேற்ப ஆய்வு செய்து, அதற்கு தகுந்தவாறு அந்தந்த பாட ஆசிரியர்கள்
தனிக்கவனம் செலுத்த வேண்டும் என, கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.எஸ்.ஏ., திட்ட தலா 4 பயிற்றுநர்களுக்கு,
சென்னையில் 3 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இவர்கள் மூலம் அந்தந்த மாவட்ட
பயிற்றுநர்களுக்கு பயிற்சி தரப்பட்டு, பின்னர் ரெகுலர் அரசு பள்ளி
ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்கப்படும்.
சிவகங்கை எஸ்.எஸ்.ஏ.,திட்ட கூடுதல் முதன்மை
கல்வி ஜெயலட்சுமி கூறுகையில், "ரெகுலர் அரசு பள்ளியில் பயிலும்
மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தன்மையை புரிந்து, அவர்களுக்கான கல்வியை
அளிக்க இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. படித்தல்,கேட்டல், எழுதுதல்,
தேர்வுக்கு தயாராகுதல் என்ற அடிப்படையில் இவர்களுக்கு தனிக்கவனம் செல்லும்
வகையில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எங்களது திட்ட பயிற்றுநர்கள் பயிற்சி
அளிப்பர்,&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...