அமெரிக்காவைச் சேர்ந்த, "மைக்ரோசாப்ட்"
நிறுவனம், உலகளவில் நடத்திய கம்ப்யூர்ட்டர் தேர்வில், தமிழக சிறுவன்
பிரணவ், முதலிடத்தைப் பெற்று, சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம், பாலமேட்டைச் சேர்ந்தவர்,
கல்யாண்குமார். அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்சில், வங்கியில் வேலை
பார்த்து வருகிறார். இவரது மகன், ப்ரணவ் கல்யாண், 9, அங்குள்ள பள்ளியில்
படித்து வருகிறார். இவருக்கு, ஆரம்பத்தில் இருந்தே, கம்ப்யூட்டர் மேல்
விருப்பம். அதனால், பிரணவ்விற்கு பல்வேறு கம்ப்யூட்டர் நுணுக்கங்களை,
கல்யாண் கற்றுக் கொடுத்தார்.
சமீபத்தில், மைக்ரோ சாப்ட் நிறுவனம் உலக அளவில், சிறுவர்களுக்கான கம்ப்யூட்டர் தேர்வு நடத்தியது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள் பங்கேற்றனர். அதில், பிரணவ் கல்யாண் முதலிடத்தைப் பிடித்தார். அவனை பாராட்டி மைக்ரோ சாப்ட் நிறுவனம், "உலகின் இளைய சிறப்பு தொழில்நுட்ப வல்லுனர்" என்ற பட்டத்தை வழங்கி கவுரவித்துள்ளது.
இது குறித்து, மதுரையில் உள்ள கல்யாண்குமார் குடும்பத்தினர் கூறியதாவது: குழந்தைகளை, அவர்கள் விரும்பும் துறைகளில் ஈடுபடுத்தினால், அவர்கள் சாதித்து காட்டுவர் என்பதற்கு, பிரணவின் சாதனை, ஒரு உதாரணம்.
கம்ப்யூட்டர் தேர்வுகளில், பெரியவர்கள் தேர்ச்சி பெறுவது சாதனை அல்ல; ஆனால், 9 வயதே நிரம்பிய குழந்தை, உலக அளவில் வெற்றி பெற்றது, மிகப் பெரிய சாதனை. இந்த சாதனை எங்களுக்கு மட்டுமல்ல; தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...