Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கல்வி - பட்டதாரி ஆசிரியர்கள் எம்.ஏ / எம்.எஸ்.சி., பட்டப்படிப்பிற்கு பெறும் முதல் ஊக்க ஊதிய உயர்விற்கு பின் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியாக உயர்கல்வி எம்.எட்., உடன் எம்.பில்., மற்றும் பி.எச்.டி., பட்டங்களை சேர்த்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.





8 Comments:

  1. i want Mphil exam time table

    periyar university

    Aug/Nov -2009

    sub.physics

    if. anybody have pls upload

    it may very use to other teacher

    ReplyDelete
  2. ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை: டில்லி கோர்ட் தீர்ப்பு

    புதுடில்லி: ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில், அரியானா முன்னாள் முதல்வர், ஓம் பிரகாஷ் சவுதாலா, அவரது மகன், அஜய் சிங் சவுதாலா ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய லோக்தளம் கட்சியை சேர்ந்தவர், ஓம்பிரகாஷ் சவுதாலா, 78. இவர், 2000ல், அரியானா முதல்வராக பதவிவகித்தபோது, மாநில கல்வித் துறை சார்பில், 3,206 பணியிடங்களுக்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.இதில், ஊழல் நடந்ததாக புகார் எழுந்ததைஅடுத்து, சி.பி.ஐ., விசாரித்தது. லஞ்சம் பெற்று, பணி நியமனம் செய்ததாகவும், போலியான ஆவணங்களைத் தயாரித்ததாகவும்,ஓம் பிரகாஷ் சவுதாலா; அவரது மகனும், இந்திய தேசிய லோக்தளம் கட்சி எம்.எல்.ஏ.,வுமான, அஜய் சிங் சவுதாலா; அப்போதைய, ஆரம்ப கல்வித் துறை இயக்குனர், சஞ்சீவ் குமார்; சவுதாலாவின் சிறப்பு அதிகாரியாக பணியாற்றிய, வித்யாதர் மற்றும் அதிகாரிகள் உட்பட, 62 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள், 2008ல், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இவர்கள் மீது, லஞ்சம் வாங்கியது, மோசடி, சதித் திட்டம், போலியான ஆவணங்களைத் தயாரித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்தது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், ஆறு பேர், விசாரணையின் போதே இறந்து விட்டனர். ஒருவர், வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்; மீதமுள்ள, 55 பேர் மீதும், விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், கடந்த வாரம் தீர்ப்புஅளிக்கப்பட்டது. அதில், சவுதாலா, முதல்வராக பதவி வகித்தபோது நியமிக்கப்பட்ட, 3,206 ஆசிரியர் பணியிடங்களும், சட்ட விரோதமாக நடந்துள்ளது. இந்த ஒட்டு மொத்த ஊழலுக்கும், அப்போதைய முதல்வர் சவுதாலா தான், காரணமாக இருந்துள்ளார்.அவரது உத்தரவுப்படி தான், இந்த ஊழல் நடந்துள்ளது.எனவே, இந்த வழக்கின் பிரதான குற்றவாளி, ஓம்பிரகாஷ் சவுதாலா தான். இந்த ஊழல், தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்குமே, இந்த ஊழலில் தொடர்புள்ளது என்று தெரிவித்தார். குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை விபரம் 22ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. கோர்ட் முன்பாக ரகளை: இந்நிலையில், டில்லி ரோகினி பகுதியில் உள்ள கோர்ட்டில், சவுதாலாவுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படுவதாக இருந்தது. இதனால்அந்த கோர்ட் முன்பாக கூடிய சவுதாலா ஆதரவாளர்கள் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகைகுண்டு வீசியும் கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. 10 ஆண்டு சிறை: இந்நிலையில், சவுதாலா மற்றும் அவரது மகன் உட்பட குற்றம் உறுதி செய்யப்பட்டவர்கள் மீதான தண்டனை விபரத்தை நீதிபதி வாசித்தார். அதில் சவுதாலா, அவரது மகன் அஜய், சஞ்சீவ் குமார், வித்யா தர் மற்றும் ஷெர் சிங்பத்சாமி ஆகியோருக்கும் பத்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

    ReplyDelete
  3. Please upload all M.Phil exam time table in Periyar university after 2006.
    Many teachers are wanted this.

    ReplyDelete
  4. please upload periyar university mphil computer science time table 2006 many teachers need it

    ReplyDelete
  5. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு அட்டவணை 28ல் வெளியீடு

    சென்னை: 2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக் குறித்த விபரங்கள், இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் எனதேர்வாணையத் தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.
    வருவாய்த் துறையில் 1870 வி.ஏ.ஓ பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம் முதல் வாரத்தில் நடந்தது. இதில், 1215 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 655 இடங்களை நிரப்புவதற்கான, 2ம் கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடந்தது.
    அப்போது நட்ராஜ் கூறியதாவது: இன்றைய கலந்தாய்வுக்கு 450 பேர் வந்துள்ளனர். எனவே, மீண்டும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, இம்மாதம் 24ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.
    குரூப் 4 தேர்வில், தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி, சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
    இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும். எத்தனை வகையான தேர்வுகள் நடைபெறும், அவற்றில் எத்தனை ஆயிரம் பேர், அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்றவிபரங்கள் அப்போது வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    இந்தாண்டு, 30 ஆயிரம் பேர் வரை, அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்படலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதில், குரூப் 4 பணியிடங்களை கணிசமாக எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  6. சட்டத்திற்கு முரணாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களை நீக்க முடிவு?- Dinamalar

    கட்டாயக் கல்வி சட்டத்திற்கு முரணாக, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த இடைநிலைமற்றும் பட்டதாரி ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்குவதற்கு, கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
    இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டத்தை, மத்திய அரசு, 2009ல் கொண்டு வந்தது. இச்சட்டம், 2010, ஏப்ரல் 1ம் தேதி, அமலுக்கு வந்தது. இந்த சட்டத்திற்குள் வரும் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், சட்டத்தின்படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
    இந்த தகுதித் தேர்வு தொடர்பாக, என்.சி.டி.இ., (நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன்) அறிவிக்கை, 2010, ஆகஸ்ட், 23ல் வெளியானது. இந்த தேதியில் இருந்து, ஆசிரியர் தகுதித்தேர்வு, அமலுக்கு வந்தது. அதன்படி, 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்கு முன், ஆசிரியர் தேர்வுப் பணிகளை துவங்கி, இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இந்த தேதிக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுத தேவையில்லை.
    இந்த தேதிக்குப் பின், பணியில் சேர்ந்த ஆசிரியர் அனைவரும், 5 ஆண்டுகளுக்குள், தகுதித் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்றும், இல்லையெனில், இவர்கள் தகுதிஇல்லாதவர்களாக கருதி, பணி நீக்கம் செய்யலாம் என்றும், கூறப்பட்டுள்ளது.
    மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 500க்கும் மேற்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், பணியில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களை பணி நீக்கம் செய்வதற்கு, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக,ஆசிரியர் வட்டாரங்கள் தெரிவித்தன.
    அகில இந்திய துவக்கப்பள்ளி ஆசிரியர்சங்கங்களின் கூட்டமைப்பின் செயலர் அண்ணாமலை கூறுகையில், "தொடக்க கல்வித்துறை பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை பணி நீக்கம் செய்ய, உத்தரவுகள் தயாராகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவை, தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்" என்றார்.
    தொடக்க கல்வித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "ஆர்.டி.ஐ., விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என, மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். பணி நீக்கம் குறித்து, எந்த முடிவும் எடுக்கவில்லை" என, தெரிவித்தனர்.

    ReplyDelete
  7. ஆசிரியர்களை, "டிஸ்மிஸ்' செய்யும் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்
    கட்டாயக்கல்வி சட்டத்திற்கு எதிராக (ஆர்.டி.இ.,), அரசு உதவிபெறும் பள்ளிகளில், பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை,"டிஸ்மிஸ்' செய்யும் முடிவை, கல்வித்துறை, தற்காலிகமாக நிறுத்தி
    வைத்துள்ளது.
    ஒரே நேரத்தில், 2,000 ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தால், ஒட்டு மொத்த ஆசிரியர்களின் அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும் என்பதால், இம்முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க, கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என, எந்த வகை பள்ளிகளாக இருந்தாலும், 2010, ஆகஸ்ட், 23ம் தேதிக்குப் பின் அறிவிப்பு வெளியாகி, அதன் அடிப்படையில் பணியில் சேரும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பது விதி.
    ஆனால், மேற்கண்ட தேதிக்குப் பின், அரசு நிதியுதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள், 2,000 பேர் வரை சேர்ந்திருக்கலாம் என, கூறப்படுகிறது.
    இந்த பணி நியமனம், ஆர்.டி.இ., சட்டத்திற்கு எதிரானது என்பதால், இவர்கள் அனைவரையும் பணி நீக்கம் செய்ய, கல்வித்துறைக்கு, அரசு உத்தரவிட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் அடிப்படையில், முதல்கட்டமாக, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்த ஆசிரியர்களை, பணி நீக்கம் செய்ய, துறை இயக்குனரகம் நடவடிக்கை எடுத்தது. இந்த தகவல் தெரிந்ததும், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் மத்தியில் பெரும் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. பணி நீக்க உத்தரவு கடிதங்கள், நேற்றுவழங்க இருந்த நிலையில், பிரச்னை குறித்த முழு விவரங்களையும், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
    இதைத் தொடர்ந்து, பணி நீக்க உத்தரவு வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்த நிர்வாகி தெரிவித்தார். இந்த பிரச்னை குறித்து, முழுமையாக ஆய்வு செய்த பின், இறுதி முடிவு எடுக்கப்படும் என, துறை
    வட்டாரங்கள் தெரிவித்தன.
    இது குறித்து சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: முதலில் மேற்கண்ட தேதிக்குப் பின், ஆசிரியர் பணி நியமனம் செய்யக் கூடாது என, சம்பந்தபட்ட துறை சார்பில் அறிவிப்பு வெளியிட்டிருக்க வேண்டும். இதை, அதிகாரிகள் செய்யவில்லை.
    மேலும், ஆசிரியர் நியமனங்களுக்கு, அதிகாரிகள் அனுமதியும் வழங்கி உள்ளனர். இப்படி, ஆரம்பத்தில் நடந்த தவறுகளுக்கு, அதிகாரிகளும் ஒரு காரணமாக உள்ள நிலையில், திடீரென ஆசிரியர்களை மட்டும் பழிவாங்குவது நியாயமில்லை.
    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ReplyDelete
  8. நடுநிலை பள்ளியில் பணி புரியம் பட்டதாரி ஆசிரியர்கள் யாராவது P.hd  முடித்ததற்காக ஊக்க ஊதியம் வாங்கி இருக்கிறீர்களா? அப்படி வாங்கி இருந்தால் அந்த ஆர்டர் காபி பகிர்ந்து கொள்ள முடியுமா? 

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive