"உழைப்பு, அறிவுத் தேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு
என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும்,' என்று முன்னாள் ஜனாதிபதி
அப்துல்கலாம் வலியுறுத்தியுள்ளார்.
உங்கள் சிந்தனை, செயல் ஒன்றுபட்டால்,
2020ம் ஆண்டில் லட்சியம் நிறைவேறும். அதற்கு, கிராமத்துக்கும்,
நகரத்துக்கும் இடைப்பட்ட, சமூக, பொருளாதார இடைவெளி குறைந்த நாடாக இந்தியாவை
மாற்றவேண்டும்.
சுத்தமான குடிநீர், அனைவருக்கும் தேவையான
எரிசக்தி, எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற
வேண்டும். சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி, பண்பாடு நிறைந்த, தரமான கல்வி
அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி, வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாகவும் இந்தியாவை மாற்ற வேண்டும். ஒவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஒரு லட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்க வேண்டும்.
தொடர்ந்து அறிவைப் பெற, அதை தேடி சென்றடைய வேண்டும்.
விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடைச் செய்ய வேண்டும். உழைப்பு, அறிவுதேடல், விடாமுயற்சி, தோல்வியை வெல்லும் மனப்பாங்கு என்ற, நான்கு குணங்கள் இருந்தால் கனவு நனவாகும். இவ்வாறு அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...