அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை
அதிகப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி தரத்தை மேம்படுத்த
வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட கிராமப்பகுதிகளில் உள்ள
தொடக்கப் பள்ளிகளில் 70 சதவீத பள்ளிகளில் ஐம்பதுக்கும் குறைவான மாணவ,
மாணவிகளே படித்து வருகின்றனர்.
நடுநிலைப்பள்ளிகளிலும் இதே நிலையே
உள்ளது. 10 மாணவர்களே படிக்கும் பள்ளிகளும் உள் ளன. வெகு சில இடங்களில்
மட்டுமே அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண் ணிக்கை கூடுதலாக உள்ளது.
அரசுப்
பள்ளிகளுக்காக மாதம்தோறும் செலவிடப்படும் தொகை மற்றும் கல்விக்காக
எடுக்கும் நடவடிக்கைகளுக்கும், அரசு பள்ளிகளிலுள்ள மாணவ, மாணவிகளின்
எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசம் காணப்படுகிறது. இதனால் தனியார்
பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளிலும் கல்வி தரத்தை மேம்படுத்த நடவடிக்கை
எடுக்கவேண்டும். கட்டமைப்பு வசதிகள், தரமான கல்வி என பல் வேறு அடிப்படை
வசதி களை உயர்த்தவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து
பெற்றோர் - ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘தனியார்
பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு உள்ளிட்ட அடிப்படை
வசதிகள், கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். பெரும்பாலான கிராமங்களுக்கு
தனியார் பள்ளி வாகனங்கள் வருவது முக்கியமான காரணம் ஆகும். தங்கள்
குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்கிறார்கள் என்று சொல்வதை கவுரவமாக
நினைப்பது போன்ற சிந்தனையும் உள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதன்
பயன், சமச்சீர் கல்வி பற்றிய விளக்கக் கூட்டங்கள் நடத்துவது போன்ற
நடவடிக்கைகள் மூலமே அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த
முடியும்,‘ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...