தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி
உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப்ரவரி 8ம் தேதிக்குள் வழங்க,
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல், தாவரவியல், விலங்கியல் 2005-06 வரை உள்ளவர்கள், வரலாறு ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 1997-98 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பட்டம் பெற்ற 2004-05 வரை உள்ளவர்கள், பொருளியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் 2008- 09, வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2005-06 வரை உள்ளவர்கள்,வணிகவியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 31.12.1992 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2009-10 வரை உள்ளவர்கள், புவியியல் 2002-03 வரை உள்ளவர்கள், அரசியல் விஞ்ஞானம் 2002-03 வரை உள்ளவர்கள். உடற்கல்வி இயக்குனர் நிலை 1 - 2002-03 வரை உள்ளவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் மொழிப்பாடம் 31.12.2012 வரை உள்ளவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 31.12.12 வரை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.
முதுகலை ஆசிரியரிலிருந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு, 31.12.12 ல் பத்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள், பதவி உயர்வு பட்டியலை 22.01.2013 க்குள் பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டும்.
பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக ,முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2000 -2001 வரை உள்ளவர்கள், முதுகலையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2009 வரை உள்ளவர்கள், 31.01.13க்குள் சென்னை பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும்.
பட்டதாரியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்கள், பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தேதிகள், மாவட்டம் வாரியகாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்:
பிப்ரவரி 4 : நாகர்கோவில், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்.
பிப்ரவரி 5: மதுரை, திண்டுக்கல், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
பிப்ரவரி 6: கரூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, நீலகிரி, சேலம், திருப்பூர்.
பிப்ரவரி 7: நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி.
பிப்ரவரி 8: திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை.
இதற்கு முன்னதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பம் பெற்று ,குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
Please include tirunelveli dist
ReplyDeleteWill they include newly joined (17.12.2012) TET secondary grade teachers in the Panel? Are they eligible???? If anyone know about this, please inform
ReplyDeletePG Asst Vacants perumbalum anaithu palligalilum etho oru padathilavadhu ondrilavathu Ulladhu.
ReplyDeletePlease sariyana muraiyil kanaku eduthu, munkootey thittamittu 50% vacants sariyana muraiyil nirappa vendum.
Maths 2002 -03 Physics 2005-06 Chemistry 2005-06, Botany, Zoology , english 2002-03 ena anaivarum TRB yil therndhedukkapattavargal .TRB exam eluthi vetri petravargal, ivargalai kondu gaaali paniyidam nirappinal nalladhu nadakkum.kalvi tharm uyaram. dhayavu seithu yosiyungal.Maths, Phy, Chem arasu palligali kali paniyidm. matric il +1 ileya +2.