இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால்
அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7
சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசின்
நிதி தொகை ரூ.45,969 கோடியில் இருந்து ரூ.3240 கோடியாக குறைக்கப்பட
உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான நிதி போதிய அளவில்
இருப்பதால் அத்துறைக்கான நிதி தொகையில் 7 சதவீதத்தை குறைக்க
திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கல்வி துறைக்கான நிதியை அடுத்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்த்தி ரூ.61,427 கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படும் எனவும், இது 22 சதவீதம் நிதி தொகை உயர்வு எனவும் சர்வ சிக்ஷா அபியான் தெரிவித்திருந்தது. தற்போது இதில் 7 சதவீதம் குறைப்பு என்பது சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 20 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர்கல்வி துறைக்கான நிதியையும் 13 சதவீதம் குறைத்து ரூ.15,458 கோடியாக ஒதுக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
கல்வி துறை நிதி குறைப்பு, மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி மதிய உணவு திட்டத்தை கையாண்டு வரும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிதி நெருக்கடி, வரும் பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சகத்தால் ஈடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிதி சுமைகளை கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் நிதித் தொகை குறைப்பு உள்நாட்டு கல்வி வளங்களில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...