புதிதாக பணியில் சேர்ந்த, 21 ஆயிரம் ஆசிரியர்களில், 6,000
ஆசிரியர்களுக்கு, டிசம்பர் மாத சம்பளம் வழங்கப்படவில்லை. மத்திய இடைநிலைக்
கல்வி திட்ட நிதி - ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் இருந்து, சம்பளம் வழங்க
வேண்டியிருப்பதால், கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்கள்
தெரிவித்தன.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரத்தினர் கூறுகையில், "இவர்களுக்கு
சம்பளம் வழங்க, மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும். இதனால், சற்று கால
தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓரிரு நாளில், அனைவருக்கும், சம்பளம் வழங்கப்படும்"
என்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...