"பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான, 56 விடுதிகளுக்கு, 50 கோடி
ரூபாயில், சொந்த கட்டடம் கட்டப்படும்" என முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
இதில், 100 மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றுக்கும், ஒரு கோடி
ரூபாயும், 50 மாணவர்கள் தங்கும் விடுதிகள் ஒவ்வொன்றுக்கும், 71 லட்சம்
ரூபாயும் வழங்கப்படும். சொந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின், தமிழக
எரிசக்தி மேம்பாட்டு முகமை மூலம், சூரிய ஒளி மூலம் நீரை சூடுபடுத்தும்
கருவிகள், 4 லட்சம் ரூபாய் மதிப்பில் நிறுவப்படும்.இவ்வாறு, அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...