"மதுரை மாவட்டத்தில் 300 பள்ளிகளுக்கு மின் இணைப்புகள்
துண்டிக்கப்பட்ட பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும்,&'&'
என்று, தொடக்க கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்தார்.
மாவட்டத்தில், கிழக்கு ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு
உட்பட்ட மேலமடை, ஒத்தக்கடை, சிட்டாம்பட்டி, கள்ளந்திரி, திருப்பாலை,
நரசிங்கம், சக்கிமங்கலம் உட்பட, 16 ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சுமார் 300
தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தற்போது மின் இணைப்புகள்
துண்டிக்கப்பட்டுள்ளன.
இப்பள்ளிகளுக்கு 2009லிருந்து மின் கட்டணம்
செலுத்தாததால், ரூ. பல லட்சம் வரை பாக்கி உள்ளது. இதனால், 2012 ஜனவரி முதல்
அந்த பள்ளிகளுக்கான மின் இணைப்புகளை, மின்வாரியம் துண்டித்தது.
அந்த பள்ளிகளில் கணினி வழி கற்றல் உட்பட மாணவர்களின்
கல்வி பாதித்துள்ளது. இப்பிரச்னை குறித்து, கல்வித்துறை உயர் அதிகாரிகள்
கவனத்துக்கு கொண்டு சென்றும் எவ்வித தீர்வும் ஏற்படவில்லை. பல பள்ளிகளில்
மாணவிகள் அதிக எண்ணிக்கையில் பயில்கின்றனர். அங்கு மின்வசதி இல்லாததால்
தண்ணீரின்றி கழிப்பறைகள் செயல்படாமல் முடங்கியுள்ளது, மாணவிகளை மனரீதியாக
பாதித்துள்ளது என, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.
தமிழ்நாடு தொடக்க கல்வி துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன்
கூறுகையில், "மாவட்டத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தொடக்க மற்றும்
நடுநிலை பள்ளிகளுக்கு, உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அனைத்து "பில்"களையும்
செலுத்துவதற்கு இன்னும் இரு தினங்களில் நடவடிக்கை
எடுக்கப்படும்,&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...