மாவட்டக் கல்வி அலுவலர்களை கூடுதலாக நியமிக்க
வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும்
தலைமையாசிரியர்கள் வரும் 29ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி
தலைமையாசிரியர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:
மத்திய அரசுக்கு இணையாக தமிழக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் தரம் உயர்த்தப்படும்
பள்ளிகளுக்கான கட்டிட பணிகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள்தான் கட்டி
முடிக்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது. இதனால் கூடுதல் பணிச்சுமையால்,
வழக்கமான பணிகளைக் கூட தலைமையாசிரியர்கள் செய்ய முடியவில்லை. எனவே பள்ளி
கட்டுமான பணிகளை அரசே செய்ய வேண்டும்.
தமிழகத்தில் தற்போது 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. எனவே மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களை கூடு தலாக உருவாக்க வேண்டும். மாவட்டக் கல்வி அலுவலர்களை 20 சதவீதம் நேரடி நியமனம் செய்யும் முறையை கைவிட வேண்டும். அப்பணியிடங்களில் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்கள், நகராட்சி, மாநகராட்சி, கள்ளர் சீரமைப்பு பள்ளி, ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் பணி வழங்க வேண்டும். கல்விப் பணி சிறப்பாக நடைபெற பிற துறை பணிகளை ஆசிரியர்களுக்கு திணிக்க கூடாது. பிளஸ் 2, 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வரும் 29ம் தேதி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலங்கள் முன்பும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...