2013ம் ஆண்டு டி.என்.பி.எஸ்.சி நடத்தவுள்ள தேர்வு அட்டவணை
மற்றும், அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ள பணியாளர்களின் எண்ணிக்கைக்
குறித்த விபரங்கள், இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும் என தேர்வாணையத்
தலைவர் நட்ராஜ் தெரிவித்தார்.
வருவாய்த் துறையில் 1870 வி.ஏ.ஓ
பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு, இம்மாதம் முதல் வாரத்தில் நடந்தது.
இதில், 1215 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள 655 இடங்களை நிரப்புவதற்கான, 2ம்
கட்ட கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் நடந்தது.
அப்போது நட்ராஜ் கூறியதாவது: இன்றைய கலந்தாய்வுக்கு 450 பேர்
வந்துள்ளனர். எனவே, மீண்டும் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப, இம்மாதம்
24ம் தேதி, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடக்கும்.
குரூப் 4 தேர்வில்,
தேர்வுபெற்ற ஆதரவற்ற விதவைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது. அதன்படி,
சம்பந்தப்பட்ட சான்றிதழ்களுடன், தேர்வு பெற்றவர்கள், 24ம் தேதி நடக்கும்
கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இந்த ஆண்டிற்கான தேர்வு அட்டவணை, இம்மாதம் 28ம் தேதி வெளியிடப்படும்.
எத்தனை வகையான தேர்வுகள் நடைபெறும், அவற்றில் எத்தனை ஆயிரம் பேர், அரசுப்
பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவர் என்ற விபரங்கள் அப்போது வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்தாண்டு, 30 ஆயிரம் பேர் வரை, அரசுப் பணிகளுக்குத் தேர்வு
செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், குரூப் 4 பணியிடங்களை
கணிசமாக எதிர்பார்க்கலாம்.
Very Good News
ReplyDeleteI am preparing for this Exams