கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி
பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வரும், 23ம் தேதி
கிருஷ்ணகிரி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது.
இதில், தேர்ச்சி பெற்ற தேர்வாளர்களுக்கு கடந்த டிசம்பர், 28ம் தேதி
முதல் ஜன., 2ம் தேதிவரை நேர்முகத் தேர்வு நடத்த அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது. சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் டிசம்பர்,
28ம் தேதி மட்டும் நடந்தது. பின்னர் பலத்த மழையால் ஏற்பட்ட பாதிப்புகள்
காரணமாக 29ம் தேதி முதல் நடக்கவிருந்த நேர்முகத் தேர்வு மறுதேதி
குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்பட்டது.
இவ்வாறு ஒத்தி வைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகள், தேர்வாளர்களின் வசதி
கருதி தேர்வாளர்கள் எந்தெந்த மாவட்டத்தில் எழுத்து தேர்வினை எழுதினார்களோ
அந்தந்த மாவட்ட தலைநகரில் வரும் ஜனவரி, 23ம் தேதி முதல், 31ம் தேதி வரை
நடத்த மாநில ஆள் சேர்ப்பு நிலையத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே, கடந்த டிசம்பர், 29ம் தேதி முதல் ஜனவரி, 2ம் தேதி வரை நேர்முகத்
தேர்வில் பங்கேற்க இருந்த கிருஷ்ணகிரி மாவட்டத் தேர்வாளர்களுக்கு
கிருஷ்ணகிரி கூட்டுறவு காலனி மேற்கு இணைப்பு சாலையில் உள்ள மண்டல
இணைப்பதிவாளர் அலுவலகத்தில் வரும் 23ம் தேதி நேர்முக தேர்வு நடக்கிறது.
இதற்கான அழைப்பு கடிதங்கள் அவரவர் தொடர்பு முகவரிக்கு அனுப்பி
வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு விருப்பமான மாவட்டம்
மற்றும் கூட்டுறவு நிறுவனங்களின் பெயர்களை உரிய படிவத்தில் இணைய தளத்தில்
பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விபரங்களை பதிவேற்றம் இரு நகல்கள் எடுத்து
அவற்றில் தங்கள் ஃபோட்டோவை ஒட்டி நேர்காணலின் போது தவறாமல் எடுத்து
வரவேண்டும்.
நேர்காணலுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தமிழ் மொழியை பயிற்று மொழியாக
கொண்டு தங்களது இளங்கலைப் பட்டப் படிப்பினை முடித்திருந்தால் அதற்கு
சான்றாக தங்களின் பயற்று மொழியை குறிப்பிடக்கூடி ஆவணங்களில் ஒன்றான
மாற்றுச் சான்றிதழ் அல்லது தங்கள் பட்டப் படிப்பு பயின்ற கல்லூரியின்
முதல்வரால் தமிழனைப் பயிற்று மொழியாக கொண்டு பட்டப்படிப்பு படித்தமைக்கான
சான்றினை பெற்று வரவேண்டும்.
இந்த தகுதி சான்றிதழ் இல்லையென்றால் தமிழ் மொழியை பயிற்று மொழியாக
கொண்டு தகுதி கல்வி முடித்தமைக்கான முன்னுரிமை வழங்க இயலாது. மேலும் வயது,
ஜாதி, கல்வித் தகுதிகள் தொடர்பான அனைத்து மூலச்சான்றிதழ்களையும் இரண்டு
ஜெராக்ஸ் நகல்களில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று
நேர்காணலுக்கு வரும் போது கொண்டு வரவேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...