டி.என்.பி.எஸ்.சி.
குரூப்–1 தேர்வுமுறையில் அதிரடிமாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
முதல்நிலைதேர்வில், ‘ஆப்டிடியூட்’ என்ற புதிய பாடமும், மெயின் தேர்வு
பொதுஅறிவு தாளில் ஆங்கில பாடமும் புதிதாக
சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு மெயின் தேர்வு, நேர்முகத்தேர்வுக்கான மதிப்பெண்
அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.குரூப்–1 தேர்வு துணை கலெக்டர், போலீஸ்
டி.எஸ்.பி., ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், வணிகவரி உதவி கமிஷனர்,
கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், பத்திரப்பதிவு மாவட்ட பதிவாளர்,
மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, கோட்ட தீயணைப்பு அதிகாரி (டி.எப்.ஓ.) ஆகிய 8
விதமான உயர்பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக குரூப்–1தேர்வு
நடத்தப்படுகிறது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
நடத்துகின்ற இந்த தேர்வை எழுத பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். இந்த தேர்வு, முதல்நிலை தேர்வு, மெயின் தேர்வு, நேர்முக தேர்வு
என 3 நிலைகளை உள்ளடக்கியது ஆகும். இதுவரையில், முதல்நிலை தேர்வில் பொது
அறிவு தொடர்பாக 200 வினாக்கள் கேட்கப்படும். மெயின் தேர்விலும் பொது
அறிவில் தலா 2 தாள்கள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் 300 மதிப்பெண்.
நேர்முகத்தேர்வுக்கு80 மார்க் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதிரடி மாற்றம் இந்த
நிலையில், குரூப்–1 தேர்வில் டி.என்.பி.எஸ்.சி. அதிரடியாக பல்வேறு
மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. அதன்படி, முதல்நிலை தேர்வில் பொதுஅறிவில்
புதிதாக ‘ஆப்டிடியூட்’ என்ற பாடம் சேர்க்கப்படுகிறது. ஆப்டிடியூட் என்பது
ஒருவரின் சிந்தனைத்திறன், பொதுவிழிப்புணர்வு, பகுத்து ஆராயும் திறன்
சம்பந்தப்பட்டது ஆகும். பொதுஅறிவில் கேள்விகள் 150 ஆக குறைக்கப்பட்டு
எஞ்சிய 50 கேள்விகள் ஆப்டிடியூட் பாடத்தில் இருந்து கேட்கப்படும்.முதல்நிலை
தேர்வை போன்று மெயின் தேர்விலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன.
அதன்படி, கூடுதலாக 300 மதிப்பெண்ணுக்கு பொதுஅறிவு தாள் ஒன்று புதிதாக
சேர்க்கப்படுகிறது. அதோடு பொது அறிவில் ஆங்கில பாடமும் (கட்டுரை எழுதுதல்,
சுருக்கி வரைதல் போன்றவை) புதிதாக இடம்பெறுகிறது.
விண்ணப்பதாரரின் ஆங்கில
மொழித்திறனை சோதிக்கும் வகையில் இதில் கேள்விகள் கேட்கப்படும்.
நேர்முகத்தேர்வுக்கு 120 மார்க் மெயின் தேர்வில் புதிதாக 300
மதிப்பெண்ணுக்கு கூடுதலாக ஒரு தாள் சேர்க்கப்பட்டு இருப்பதால் மெயின்
தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 600–லிருந்து 900 ஆக உயர்ந்துவிடும்.தற்போது,
நேர்முகதேர்வுக்கு 80 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இது 120 ஆக
அதிகரிக்கப்படுகிறது.இந்த ஆண்டுக்கான குரூப்–1 தேர்வு வரும்
27–ந்தேதிநடத்தப்பட உள்ளது. இதில் புதிய தேர்வுமுறை பின்பற்றப்படும் என்று
டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான
கடைசி தேதி 7–ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம், 8 துணை
கலெக்டர்களும், 4 டி.எஸ்.பி.க்களும், 7 வணிகவரி உதவி கமிஷனர்களும், மாவட்ட
பதிவாளர் ஒருவரும், 5 மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரிகளும் என மொத்தம் 25 பேர்
தேர்வு செய்யப்பட உள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...