Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு: பிப்ரவரியில் நேர்காணல்

        குரூப்-1 பணியிடங்களுக்கான, எழுத்துத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. 

      இதில் வெற்றிப் பெற்றவர்களுக்கான நேர்காணல், சென்னை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், பிப்ரவரி, 1, 2, 4 மற்றும் 5ம் தேதிகளில் நடக்கிறது.
     துணை கலெக்டர், வணிக வரித்துறை உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலிப் பணியிடங்களை நிரப்ப, ஜூலை, 28, 29ம் தேதி, எழுத்துத் தேர்வு நடந்தது. இத்தேர்வு முடிவுகள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்- டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.
           தேர்வில் பங்கேற்பது குறித்த விவரங்கள், போட்டியாளர்களுக்கு விரைவில் அனுப்பப்படும். நேர்காணலின் போது, போட்டியாளர்கள் கொண்டு வரவேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்களை, www.tnpsc.gov.in இணையதளத்தில் பெறலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive