எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதுவோரின் விபரம் சேகரிப்பில்,1999 ல்
பிறந்தவர்களை ஆன்-லைனில் ஏற்க மறுப்பதால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.
1999ல் பிறந்த மாணவர்களின் பிறந்த
ஆண்டை, தற்காலிகமாக 1998 என குறிப்பிட்டு, பதிவு செய்ய கல்வித்துறை
அறிவுறுத்தியுள்ளது. இது, மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்பதால்,
தலைமை ஆசிரியர்கள் முடிவெடுக்க, முடியாமல் உள்ளனர்.
தலைமை ஆசிரியர் ஒருவர் கூறுகையில்,
"14 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1999ல் பிறந்தவர்களின்
வருடத்தை 1998 என குறிப்பிட்டு, சாப்ட்வேரில் ஏற்ற சொல்கின்றனர். இந்த முறை
தற்காலிமானது என்றாலும், அதை மீண்டும் சரியாக மாற்றாவிடில், பிறந்த
சான்றிதழிலும், எஸ்.எஸ்.எல்.சி., மார்க் பட்டியலிலும் பிறந்த ஆண்டு மாற
வாய்ப்பு உள்ளது,&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...