ஊட்டியில் நடந்து வரும் ராணுவ ஆட்சேர்ப்பில், 400 பணியிடங்களுக்கு, 12 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
முகாம் குறித்து, அதிகாரி கர்னல் தருன்மதன், நேற்று, நிருபர்களிடம் கூறியதாவது: கோவை, திருச்சி, சென்னை மண்டலங்களில், ஆறு மாதத்திற்கு ஒருமுறை ராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது.
கோவை மண்டலத்தில், 11 மாவட்டங்களை உள்ளடக்கி, ஊட்டியில், ஆட்சேர்ப்பு நடத்தப்படுகிறது. ராணுவ வீரர், நர்சிங் உதவியாளர், கிளார்க், ஸ்டோர் கீப்பர், டெக்னிக்கல், என, 400 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.11 மாவட்டங்களில் இருந்து, 12 ஆயிரம் இளைஞர்கள் ஆட் சேர்ப்பில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கு, உடற்தகுதி, மருத்துவத் தகுதி என, பல கட்ட சோதனை நடத்தப்படுகின்றன. ஆட்சேர்ப்பு, வெளிப்படையான முறையில் நடந்து வருகிறது. ராணுவத்தில் சேர, இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், ஆட்சேர்ப்பு முகாம் நடத்த, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது; போலீசாரின் ஒத்துழைப்பும் சிறப்பான முறையில் இருந்தது. அடுத்த ஆட்சேர்ப்பு முகாமை, மதுரை மாவட்டத்தில் நடத்த ஆலோசித்து வருகிறோம்.
இவ்வாறு தருண்மதன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...