Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12 DEO & 24 AEEO Posts Fill by Direct Exam, Announcement Expect Soon.

        நேரடி தேர்வு மூலம் 24 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் நியமனம் விரைவில் அறிவிப்பு.
 
        நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். நேரடி நியமனம் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.)பணி அமர்த்தப்படுகிறார்கள். ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில் 40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன.
          இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அந்த வகையில்,நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது. இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன.விரைவில் அறிவிப்பு பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.                 
             பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்பமுடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்தசில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை.இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive