Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு ரூ.11 கோடியில் புதிய கட்டடம்

        டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வரும், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு, 11 கோடி ரூபாயில் புதிய கட்டடம் உருவாகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள, லேடி விலிங்டன் கல்வியியல் கல்லூரிக்கு அருகே உள்ள இடத்தில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
         சென்னை, டி.பி.ஐ., வளாகம், சம்பத் மாளிகையில், கல்லூரி கல்வி இயக்குனரகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக பணிகள், ஆசிரியர், ஆசிரியல்லதோர் பணி நியமனங்கள், பணியாளர் சம்பளம் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
       கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்டு வரும், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு, தனி கட்டடம் அமைக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, 11 கோடி ரூபாய் செலவில், இயக்குனரகம் உருவாக அரசு அனுமதித்துள்ளது.
திருவல்லிக்கேணியில் உள்ள, லேடி விலிங்டன் கல்வியியல் கல்லூரிக்கு அருகே உள்ள இடத்தில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது. இதற்காக, 3,200 சதுரடி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. தரைதளம், முதல், இரண்டு மாடிகள் என, கட்டடம் உருவாகிறது.
        இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறுகையில், "இயக்குனரத்துக்கு உள்ள தேவைகள் என்னென்ன, அரசு செய்து தர வேண்டிய வசதிகள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள், அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் கட்டட பணிகள் துவங்கும்" என்றனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive