2012ம் ஆண்டின் கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தம்
10 பேர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளைப் பொறுத்தவரை, மொத்தம் 4 பேர் 99.99% மதிப்பெண்களை
பெற்றுள்ளனர். ஒடிசா, உத்திரபிரதேசம், டெல்லி மற்றும் கர்நாடகா ஆகிய
மாநிலங்களைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் தற்போது இறுதியாண்டு மாணவிகள்.
மொத்தம் 255 மாணவர்களும், 1,640 மாணவர்களும் 99%க்கும் மேல் மதிப்பெண்களைப்
பெற்றுள்ளனர்.
பல ஐஐஎம்.,கள், பொறியியல் சாராத மாணவர்கள் மற்றும் பெண்களுக்கு கூடுதல்
பாயின்டுகளை வழங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளன. இதன்மூலம், வகுப்பறைகளில்,
ஒரு நல்ல கலப்பு சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு அவை செயல்படுகின்றன.
கேட் தேர்வை, கடந்த 2012ம் ஆண்டு, அக்டோபர் 11 முதல் நவம்பர் 6 வரையிலான
தேதிகளில், மொத்தம் 1 லட்சத்து 91 ஆயிரத்து 642 பேர் எழுதினர் என்பது
நினைவுகூறத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...