TET Result எப்போது வெளியிடப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது நீதிமன்ற வழக்குகள் மற்றும் தேவையற்ற Enquiry - களை தவிர்க்கும் வகையில் அடுத்து வரும் வெள்ளி மாலை result வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக நாம் கடந்த நவம்பர் மாதத்தின் ஆரம்பத்திலயே அறிவித்தோம். அதே போல் நடந்தது.
TET - Online கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இன்று மாலை அல்லது அடுத்த வெள்ளி வெளியிடப்படலாம் என நவம்பர் 23 ஆம் தேதி அறிவித்தோம். ஆனால் அடுத்த வெள்ளியான நவம்பர் 30 ஆம் நாள் சட்டசபை வைரவிழா நடந்ததால் அதற்க்கு அடுத்த வெள்ளியான டிசம்பர் 7 ஆம் நாள் கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியானது.
தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம். Countdown Start ! என டிசம்பர் - 8 ஆம் தேதி நாம் அறிவித்தோம். அதே போல் அடுத்த நாளே (டிசம்பர் - 9) TET தாள் 1இல் வெற்றிபெற்றவர்களுக்கான கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானது.
ஆனால் இதற்க்கு முன் நடந்தவாறு கலந்தாய்வு குறித்து முறையான தந்தி அறிவிப்பு வரும் என்ற நமது கணிப்பு தவறாகி விட்டதற்காக வருந்துகிறோம்.
இருப்பினும் TET கலந்தாய்வில் கலந்து கொள்வது தொடர்பாக நாம் வழங்கிய பல்வேறு தகவல்களும் புதிய தலைமுறை ஆசிரியர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும் என நாம் கருதுகிறோம்.
அனைத்து கலந்தாய்வும் முடிவடைந்த இந்த இனிய நாளில் TET தொடர்பான அனைத்து தகவல்களையும் நமக்கு உடனுக்குடன் வழங்கிய நம் பாடசாலை வாசகர்கள், நண்பர்கள் திரு. அலெக்ஸ்(ஆவடி), திரு.சுப்பிரமணி(ஏலகிரி), திரு.செந்தில் நாதன் (மடவாளம்), திரு. சந்தோஷ்(ஆம்பூர்), திரு.குமார் (திண்டுக்கல் ), திரு. சதீஷ் (தஞ்சாவூர்), திருமதி. மாலினி (திருநெல்வேலி), செல்வி.பிரியா (நாகபட்டினம்) மற்றும் நமது சந்தேகங்களுக்கு பொறுமையாக விளக்கிய கல்வி துறை அதிகாரிகள் அனைவருக்கும் நமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்!!
முக்கியமாக நமது வாசகர்கள் Comment மூலமாகவும் , Email மூலமாகவும் நம்மிடையே கேட்ட கேள்விகள் தான் நம்முடைய ஒவ்வொரு தேடலுக்கும் முக்கிய காரணம் என்பதால் அவர்கள் அனைவருக்கும் நமது நன்றிகள் ஆயிரம்!!
நன்றி!
பாடசாலை.நெட்
when will give TNTET certificate?
ReplyDeletewaiting for tntet certificate
ReplyDelete