Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET - பள்ளிக்கல்வித்துறை வரலாற்றில் ஒரு மைல் கல்!!!

பள்ளிக் கல்வி வரலாற்றில் முதன்முதலாக ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தி பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. 25 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில் 18,291 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இன்றும், நாளையும் நடைபெறும் கவுன்சிலிங்கின் மூலம் காலி பணி இடங்களை ஆசிரியர்களே ஆன்லைன் மூலம் தேர்வு செய்கிறார்கள். அவர்கள் விரும்பிய இடங்களை தேர்வு செய்த பின்னர் பணி நியமன ஆணையை முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேரில் வழங்க முடிவு செய்துள்ளார். இதற்கான விழா சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.. மைதானத்தில் 13-ந்தேதி நடக்கிறது. பள்ளிக் கல்வித்துறை இதற்கான ஏற்பாடுகளை விரிவாக செய்து வருகிறது. பகல் 12 மணியளவில் நடைபெறும் விழாவில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்று பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்குகிறார்.

           முதல்-அமைச்சர் நேரில் ஆணையை வழங்க இருப்பதால் 32 மாவட்டங்களில் இருந்தும் ஆசிரியர்கள் சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அந்தந்த மாவட்ட கலெக்டர், முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஏற்பாட்டில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் 12-ந்தேதி மாலை புறப்பட்டு 13-ந்தேதி சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். பள்ளிக் கல்வி துறை சார்பில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் என்.ஆர். சிவபதி, முதன்மை செயலாளர் சபீதா, இயக்குனர்கள் கு.தேவராஜன், வி.கி. ராமேஸ்வர முருகன் ஆகியோர் செய்து வருகின்றனர்.




1 Comments:

  1. ..............MY LIFE - MY PAIN - MY JUSTICE......
    என்.சி.டி.இ., ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியில் அமர்த்த, மாநில அளவிலான தகுதித் தேர்வை நடத்த வேண்டும். மத்திய அரசு நடத்தும் மற்ற போட்டித் தேர்வில் அளிக்கப்படும் ஒதுக்கீட்டுக் கொள்கைகள் இந்தத் தேர்விலும் கடைப்பிடிக்கப்படும். அதே நேரத்தில் ஒதுக்கீட்டு விதிகளைத் தளர்த்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும் அறிவித்திருந்தது. அதாவது பொதுப் பிரிவினருக்கான அடிப்படைத் தகுதி மதிப்பெண்கள் 60 சதவீதமாக இருக்கும்போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பிரிவு மாணவர்களுக்கு, தகுதி மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படும் என்பதுதான் அந்த ஒதுக்கீட்டுக் கொள்கை. அந்த அடிப்படையில் மதிப்பெண்களில் 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை தளர்வு அளிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரங்களை அளித்தது என்.சி.டி.இ.
    *மத்திய அரசின் போட்டித் தேர்வுக் கொள்கைகளையும், என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுகளையும் தமிழக அரசு கடைப்பிடிக்கவில்லை என்பதுதான் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்களின் கேள்வி.???
    *ஆந்திர மாநிலத்தில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினப் பிரிவு மாணவர்களுக்கு அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் 40 மதிப்பெண்கள் தளர்வு அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்லெட் மற்றும் நெட் தேர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு தேர்ச்சிக்கான அடிப்படை மதிப்பெண்ணில் தளர்வுச் சலுகை அளிக்கப்படுகிறது. கல்லூரி ஆசிரியர்கள் தேர்விற்கே ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண்கள் தளர்வு அளிக்கும்போது, ஆசிரியர் தகுதித் தேர்வில் மட்டும் தமிழகம் பாரபட்சம் பார்ப்பது ஏன் என்று புரியவில்லை???
    > OTHER STATES TET MARKS DETAILS:
    > ORISSA GOVT ANALYSIS THIS PROBLEM AND FIX PASS MARK AS OC - 60% OTHERS(OBC,SC,ST,PH) - 50%
    > ANDHRA GOVT FIXES OBC-50%, SC, ST, PH-40%
    > ARUNACHAL PRADESH: OC 60% OTHERS 50%
    > ASSAM: OC 60% OTHERS 50%
    > BIHAR: OC 60% OTHERS 50%
    > CHATTISGARH:OC 60% OTHERS 50%
    > RAJASTHAN: OC 60% OBC 40% ST 36%
    > U.P: OC 60% OTHERS 55%
    > WEST BENGAL: OC 60% OTHERS 55%
    > MANIPPUR: OC - 60% OTHERS - 50%
    > kerala and all other states follow reservation quota system except Tamil Nadu.
    *தற்போது நடந்து முடிந்துள்ள தேர்விற்கு என்.சி.டி.இ. அறிவித்துள்ள மதிப்பெண் தளர்வுச் சலுகை மற்ற மாநிலங்களைப்போல தமிழகத்திலும் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் தற்போது தேர்வு எழுதியிருக்கும் ஆசிரியர்களின் கோரிக்கை.

    *So our Government have to consider in giving quota marks(5%) for pass in Teach Eligibility Test.  Also, still there is a huge vacant for B.Ed(BT) teachers in government schools as well as in Aided schools. 
    *Also, if government conducts another Teacher Eligibility Test means those people who already secured 83-89(55%) in the last Teacher Eligibility Test will certainly get pass marks.But how long we struggle...with the present unemployment and underemployment. 
    *When we have completed our B.ed and D.ted in 2006 we don't have tet exam that time we waited for seniority as seniority is only followed in the last 5 years government ...now tet is introduced ......for fresh B.ed & D.ted candidates who completed in 2012 are writting tet now...(I am not blaming them)...but what about our 5 years waiting....
    *This is really big Social Injustice to Physically and visually challenged people also.
    Our Tamil Nadu Government has to think on this....
    Being born in Tamil Nadu only  I have lost my govt. job opportnity because i had scored 89 in Tet paper-2. With the same score I would get govt postings in Andra pradesh, kerala or any state in India except Tamil Nadu because all other states follows reservation quota system and grant 5% mark to backward class people. But it is not followed in Tamil Nadu. Is this a fate or social injustce?????????

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive