உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் 2வது ஆசிரியர்
தகுதி தேர்வு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி நடந்தது.
இதில் 278725 பேர் முதல்
தாளும், 377973 பேர் இரண்டாம் தாளும் எழுதினர். இதையடுத்து கீ-ஆன்சர்
இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த ஒரு வாரத்தில் 400 ஆட்சேபணை மனுக்கள்
பெறப்பட்டது. அவற்றின் மீது வல்லுநர் குழு ஆய்வு செய்தது. இதற்கிடையே
கீ-ஆன்சரில் ஏற்பட்ட குறைகள் குறித்து சிலர்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணை
நடக்கிறது. இதன் காரணமாக ஆசிரியர் பணிக்கு தகுதி உடையவர்கள் பட்டியல்
தயாரிப்பதில் இழுபறி ஏற்பட்டு வந்தது. ஆனால் ஆசிரியர் பணிக்கு
தகுதியானவர்களை நியமிக்க வெயிட்டேஜ் போடும் குழு கடந்த 20 நாளாக சான்று
சரிபார்ப்பு முடிந்தவர்களுக்கு வெயிட்டேஜ் போடும் பணியில் ஈடுபட்டு
வருகிறது. அந்த பணி முடியும் தறுவாயில் உள்ளது. அதனால் இன்று மாலை அல்லது நாளை மாலை இறுதி பட்டியல் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.
QUICK RELEASE OK!
ReplyDeleteGOOD
ReplyDeletetamil nattula nalla trb seyal paduthu. valthukkal ......
ReplyDelete