Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET - Online Counseling - Instructions 1

1.    ஆசிரியர் காலி பணியிட பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தின் மூலமும், பள்ளி கல்வி துறை இயக்குனரகம் மூலமாகவும் மட்டுமே www.Tndse.com என்ற வலைத்தளத்தில் Login செய்து Username & Password வழங்குவதன் வாயிலாக பார்க்க இயலும். 

2. காலி பணியிட பட்டியல் முன்னதாக இணைய தளத்தில் வெளியிட வாய்ப்பு குறைவு. 


3. எனவே TET - பணிநாடுனர்கள் காலி பணியிடங்கள் பற்றி தாங்கள் விரும்பும் இடத்திற்கு அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் வாயிலாக முன்னதாக அறிந்து கொள்ள இயலும்.

4. அவ்வாறு கேட்கும் போது அப்பள்ளிக்கான போக்குவரத்து வசதி, பணியிட சுழல், தற்காலிக பணியிடமா அல்லது நிரந்தர பணியிடமா ? (தற்காலிக பணியிடம் என்றால் Post Continue GO எதுவரை வெளியிடப்பட்டு உள்ளது? ) போன்ற விவரங்களை கேட்டறிந்து கொள்ளவேண்டும். குறிப்பாக நீங்கள் ஏற்கும் பணியிடம் விரைவில் பணிநிரவல் ( Next Deployment  ) மூலம் பாதிப்படைய வாய்ப்பு உண்டா என்ற விவரம் முக்கியம்.

5. காலி பணியிட பட்டியல் கலந்தாய்வுக்கு முன் கலந்தாய்வு நடைபெறும் இடத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.

6. அப்போது காலி பணியிடத்தின் பட்டியலில் உள்ள நீங்கள் விரும்பும் பள்ளிகள் வாரியாக நீங்கள் Rank List அமைத்து கொள்ள வேண்டும். 

7.  கலந்தாய்வின் போது தங்களுக்கான பள்ளியை தேர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் ஒரு சில நிமிடங்களே ஒதுக்கப்படும். அப்போது நீங்கள் விரும்பும் பள்ளியை உங்களுக்கு முன்னால் உள்ள வேறு நபர் தேர்ந்தேடுக்கும் பட்சத்தில் உடனடியாக தங்களிடம் உள்ள  Scholl Rank List இல் இருக்கும் அடுத்த பள்ளியை நீங்கள் தேர்வு செய்ய முடியும்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive