Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET மூலம் புதியதாக நியமனம் செய்யப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர் களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி

     புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. 
 
டி.இ.டி., தேர்வு வழியாக, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18 ஆயிரம் பேர், முதுகலை தேர்வில், 2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் அனைவரும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், பணியில் சேர்ந்து விட்டதாக, தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், இன்னும், பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை. ஓரிரு நாளில், "ஆன்-லைன்' வழியில், கலந்தாய்வு நடத்தி, பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எனவே, தேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும், ஜனவரியில், ஐந்து நாள் பயிற்சியை வழங்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது. கல்லூரி ஆசிரியர்கள், அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால், பாட சம்பந்தமாக, மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், முப்பருவ கல்விமுறை, தொடர் மதிப்பீட்டு முறை, மாணவர்களுக்கான, மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து, இரு நாட்களுக்கும், பயிற்சி அளிக்க, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தொடக்க கல்வித்துறையில் சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில், பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கும், ஐந்து நாள், பயிற்சி அளிக்கப்படும்.




9 Comments:

  1. பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியரை பணி நியமனம் செய்து விட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு அனைவரும் கோரிக்கை வைத்த பொழுது அரசானது TET மூலம் அறிவாளிகளை தேர்வு செய்வதாக சொன்னது. அப்படி TET மூலம் தேர்வு செய்யப்பட்ட அறிவாளிகளுக்கு பயிற்சி அளிப்பது அவர்களை அவமதிக்கும் செயலாகும். அறிவாளிக்கு எதற்கு மீண்டும் பயிற்சி.

    ReplyDelete
  2. Uptodate arivali aavatharku
    kodukkap pogindra training subject patri alla
    arasin thittangalaiyum nadavadikkaigalayum patrithan

    ReplyDelete
    Replies
    1. appona TET passed candidates-kku aptodate arivu illaiya? allathu arasin thittangalaiyum nadavadikkaigalayum patri theriyatha? ithayellam theriyathavangalaya TET select panni ullathu.

      Delete
  3. when people are selected through seniority noone bothers ,because as you said intelligents can survive anywhere.but when it is announced as exam why do you all protest and go to the extreme of criticizing others.learning for a competetive exam is not a easy job they are really intelligents that doesnt mean others are not.

    ReplyDelete
    Replies
    1. if TET passed candidates are really intelligent then tell the rationality of asking about alpha test in TET exam. TET test didn't meant for testing intelligence of a teacher, if you have intelligent, then you may realize this when you wrote first TET.

      Delete
    2. that is because, there is no social justice in the TET mode of selection, by the name of INTELLIGENCE, this is (denial of social justice) being carried out. one who thinks himself as intelligent is unfit for teacher post because a true teacher knows what is intelligent and even if he is really intelligent he won't overt it.

      Delete
    3. experience and training are best method of culminating a teacher. TET is against this method of selection. so everyone who knows about teacher job is protesting TET method.

      Delete
  4. Is there any informn abt pg assist councilling???

    ReplyDelete
  5. TET is not a competitive exam its just an eligibility test, it is sorrowful that so called intelligent doesn't know this.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive