இன்று பல மாவட்டங்களில் காலி பணியிட பட்டியல் அரங்கிற்கு வெளியே பார்வைக்கு வைக்கப்படவில்லை.
அதற்க்கு பதிலாக அரங்கின் உள் பார்வைக்கு வைக்கப்பட்டது மட்டுமல்லாமல், திரையில் Projector மூலம் காலி பணியிட பட்டியல் திரையில் காட்டப்பட்டு கொண்டே இருந்தது.
தேர்வர்கள் மற்றும் உடன் வரும் நபர் ஒருவர் என அனைத்து தேர்வர்களும் கலந்தாய்வு அறையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்ட வாரியாக காலி பணியிட பட்டியல் திரையிடப்பட்டு கொண்டே இருந்தது.
அதே நேரம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்வர்கள் பாட வாரியாக வரிசைகிரமமாக, உடகார வைக்கப்பட்டனர்.
Serial No இல் முதலில் உள்ள வ நபர்கள்அனைத்து மாவட்டங்களில் தயாராக திரை அருகே அமர வைக்கப்பட்டு அவர்களின் முறை வரும்போது அவர்களின் விருப்ப பள்ளியை கேட்கின்றனர்.
அவர்கள் தேர்வு செய்த பள்ளியின் பெயர் மற்றும் தேர்வு செய்த ஆசிரியர் பெயர் கீழ் உள்ள தனி திரையில் திரையிடப்படுகிறது. அப்போது தேர்வர்கள் தாங்கள் தேர்வு செய்த பள்ளி தங்களுக்கு சரியாக ஒதுக்கப்பட்டு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
நாம் முன்பே அறிவித்தபடி தாங்கள் தேர்வு செய்யும் பள்ளியின் வரிசை எண் மற்றும் ஆங்கில எழுத்துக்களில் முதல் முண்று எழுத்துக்களை சரியாக கூறினால் கணினி Operatorக்கு பள்ளியை ஒதுக்குவதில் சிரமம் குறையும்.
எனவே தேர்வர்கள் தயாராக செல்லவும்.
தாள் 1 இல் வெற்றி பெற்ற இடை நிலை ஆசிரியர்களுக்கு 11.12.12 அன்று கலந்தாய்வு நடை பெறுவதால் அவர்கள் அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...