கடந்த சில நாட்களுக்கு முன் IGNOU பல்கலை கழகத்தின் தொலை நிலை கல்வி மூலம் நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இது குறித்து சில தகவல்கள் நம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
1. Entrance Test இல் குறைந்தபட்ச மதிப்பெண் அல்லது அதற்க்கு மேல் பெற்றோர் தகுதி (Qualify ) பெற்றவர்களாக மட்டுமே கருதப்படுவர்.
2. உரிய இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு ( Selected Candidates Only ) மட்டுமே கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.
3. எனவே Qualify பெற்றுள்ளவர்கள் அனைவரும் Selected என நினைக்க வேண்டாம்.
4. தேர்ந்தேடுக்கப்பட்டவர்கள் OBC ஒதுக்கீட்டில் தேர்வு பெற்று இருந்தால் அவசியம் OBC சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும். OBC Certificate - Validity ஒரு வருடம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ள வேண்டும், முன்னர் பெற்று உள்ள BC சான்றிதழ் OBC சான்றிதழுக்கு இணையாகாது.
5. கலந்தாய்வு அழைக்கப்படும் போது சான்றிதழ்கள் சமர்பிக்க இயலாதவர்கள் பல்கலை கழகத்தால் ஏற்று கொள்ள கூடிய உரிய காரணம் கூறினால் சான்றிதழ் சமர்பிக்க மேலும் அவகாசம் வழங்கப்படும்.
6. MEd மற்றும் BEd இல் மொத்தம் எத்தனை சீட்டுகள் உள்ளன என்ற விவரம் கலந்தாய்வின் போது மட்டுமே அறிவிக்கப்படும். சீட்டுகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு போலவோ அல்லது அதிகரிக்கவோ வாய்ப்பு உள்ளது.
7. BEd கலந்தாய்வு டிசம்பர் இறுதியிலும், MEd கலந்தாய்வு ஜனவரி மாத இறுதியில் நடத்த வாய்ப்பு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...