இதுவரை அடுத்த தகுதி தேர்வு எவ்வாறு இருக்கும் என்பதை பார்த்தோம். இனி அத்தேர்வுக்கு
நம்மை எவ்வாறு தகுதி படைத்துக்கொள்வது என்பதை பார்ப்போம்.
அடுத்த தகுதித்தேர்வுக்கு எவ்வாறு தயார்
ஆகலாம் என்பது குறித்து நாம் ஆலோசனை கேட்டது – கல்வியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள்,
பேரறிஞர்கள், ஐ.ஏ.எஸ் போன்ற போட்டித் தேர்வுகளை நடத்தும் விரிவுரையாளர்கள்
-போன்றோர்களிடம் அல்ல.
நாம் நான்கு வகையானோரிடம் கருத்து கேட்டு
தொகுத்துள்ளோம்.
1. எவ்வாறெல்லாம்
அலட்சியமாக செயல்பட கூடாது என்பதற்காக கடந்த தகுதி தேர்வில் 0 – 50 க்குள் மதிப்பெண்
எடுத்தவர்களிடம் கருத்து கேட்டோம்.
2.
எதனால்
மிக குறைந்த மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெற தவறினார்கள்? என்பதை அறிய 70
– 90 க்குள் மதிப்பெண் எடுத்தவர்களிடம் கேட்டோம்
3. எந்த
காரணத்தால் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்று தகுதி பெற்றீர்கள் என்று 90 – 95 க்குள் மதிப்பெண்
எடுத்தவர்களிடம் கேட்டோம்
4.
மிக
முக்கியமாக 110 – 125 மதிப்பெண் பெற்றவர்களிடம் எவ்வாறு திட்டமிட்டு கடினமாக உழைத்தீர்கள்
என கேட்டறிந்தோம்.
இவர்களின் கருத்துகளையே நாம் பிரதிபலிக்கிறோம்.
திட்டம் 1:
1.
மிக
அலட்சியமாக படிக்க கூடாது.
2. தற்போது
நாம் படிப்பது தான் இத்தனை வருடங்களாக நாம் படித்ததின் இறுதி அத்தியாயம் என்பதை உணருங்கள்.
3. குறிப்பாக
இனி ஒரு வாய்ப்பு கிடையாது. அப்படியே கிடைத்தாலும் நான் அதை பயன்படுத்த முயற்சிக்க
மாட்டேன். இதுவே எனது இறுதி முயற்சி. என முடிவு செய்து இதில் நான் அதிக மதிப்பெண் பெற்று
என்னுடைய பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள், சமூகம், அரசு அனைத்திற்கும் எனது உண்மையான
திறமையை உணர வைப்பேன் என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
திட்டம் 2
1.
தாள்
1 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்
1 ஆம் வகுப்பு
முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
11 ஆம் வகுப்பு
முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 25 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக
படிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை
70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.
இதே தலைப்பில்
உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 20 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில்
ஒருமுறையும் தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.
2.
தாள்
2 ல் தேர்ச்சி பெற விரும்புபவர்கள் கீழ்கண்டவாறு படிக்க வேண்டும்
4 ஆம் வகுப்பு
முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 100 சதவீதம் ஆழ்ந்து படிக்க வேண்டும்.
11 ஆம் வகுப்பு
முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடபுத்தகங்கள் – 50 சதவீதம் கழுகுப்பார்வையில் மேம்போக்காக படிக்க வேண்டும்.
ஆசிரியர் பயிற்சியின் போது படித்த உளவியல், கற்பிக்கும் முறைகள் மற்றும் உள்ள இதர புத்தகங்களை
70 சதவீதம் ஆழந்து படிக்க வேண்டும்.
இதே தலைப்பில்
உள்ள பி.எட் மற்றும் எம்.எட் புத்தகங்களை 60 சதவீதம் மட்டுமே உழைத்து ஆரம்ப நிலையில்
ஒருமுறையும், நடுவில் ஒருமுறையும், தேர்வுக்கு முந்தைய வாரத்தில் ஒருமுறையும் படிக்க வேண்டும்.
இவ்வாறு
நீங்கள் படிக்கும்போது ஒவ்வொரு வகுப்பில் உள்ள ஒவ்வொரு பாடத்தையும் தனித்தனியாக படிக்காமால்
ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் அதே தலைப்பு தொடர்பாக மற்ற வகுப்புகளில் உள்ள பாடங்களையும்
படித்து முடித்து விட வேண்டும்.
ஏனெனில்
நமது பாடப்பகுதிகள் பெரும்பாலும் ”மரம் கிளை வகை” மற்றும் ”மை சிந்தும் முறை” பாடதிட்டத்தை
கொண்டிருப்பவை.
உதாரணமாக 6 ஆம் வகுப்பில் இந்திய நிலங்கள் குறித்து படித்தால் 7 ஆம்
வகுப்பில் மண் வகைகள் பற்றியும், அடுத்த வகுப்பில் மண்ணில் உள்ள கனிம வகைகளை பற்றியும் விரிவாக தரப்பட்டு இருக்கும். – இது நம் பாடப்பகுதிகள் எவ்வாறு தரப்பட்டிருக்கிறது
என ஒரு உதரணத்துக்காக மட்டுமே நாம் கூறியுள்ளோம்.
எனவே ஒரு
தலைப்பு பற்றி படிக்கும் போது இதர வகுப்புகளில் அதே தலைப்பில் உள்ள பாடங்களை படிக்கும்போது
நமக்கு அது குறித்து விரிவான, முழுமையான அறிவு ஏற்படும்.
பாடப்பகுதிகளை
படித்த பிறகு அவற்றில் உள்ள முக்கிய கருத்துகளை நீங்களே 1 மதிப்பெண் வினாவாக மாற்றி
வினா மற்றும் விடைகளை ஒரு குறிப்பேட்டில் எழுதி வரவும். இக்குறிப்புகள் அடுத்த முறை நீங்கள்
மீள்பயிற்சி செய்ய உதவும்.
மாவட்ட ஆட்சியர்
தேர்வுக்கு தயாராகும் போது அதற்கான பாடதிட்டம் மட்டுமே தரப்பட்டு இருக்கும். அவை குறித்து
பல்வேறு புத்தகங்களை நாம் தான் தேடி படிக்க வேண்டி இருக்கும். ஆனால் நமது ஆசிரியர் தகுதி
தேர்வை பொறுத்தவரை 1 முதல் 12 ஆம் வரையுள்ள பாடபுத்தகங்களில் இருந்தே 80 சதவீதம் கேள்விகள்
கேட்கப்படுகிறது. எனவே அவற்றை ஆழ்ந்து படித்தாலே போதுமானது.
ஒவ்வொரு
பாடப்பகுதியையும் படித்தமுடித்த பிறகு நண்பர்களுடன் கலந்துரையாடுங்கள். மற்றவரை கேள்வி
கேட்க செய்து அதற்கு பதிலளிக்க முற்படுங்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
மேலும் எந்த வகையில் நீங்கள் பாடப்பகுதியை ஆழந்து படிக்க வேண்டும் என்ற அறிவையும்,
ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.
ஒரு பாடப்பகுதியை
முழுமையாக பயின்ற பிறகு தான் அது குறித்த மீள்பயிற்சிக்காக மட்டுமே நீங்கள் ஆசிரியர் தகுதி
தேர்வுக்காக இணையத்திலும், புத்தக வடிவிலும் உள்ள பல்வேறு பயிற்சி புத்தகங்களை நாட வேண்டும்.
முழுமையாக பயிற்சி புத்தகங்களை மட்டுமே நம்பியிருக்க வேண்டாம்.
இறுதியாக
எவ்வாறு படிப்பது என ஒரு மாதிரி நேர வழிகாட்டியை (Model Schedule) அமைத்துக்கொள்வோம்.
தோராயமாக ஜூன்
மாதத்தில் அடுத்த தகுதி தேர்வு நடப்பதாக வைத்து கொள்வோம்.
அப்படியெனில் ஜனவரி முதல் மே மாதம் வரை இடையில் 5 மாதங்கள் மட்டுமே உள்ளன.
தாள் 2 க்கு தயார் ஆவதெனில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையுள்ள 15 பாட புத்தகங்களையும்
நீங்கள் முதல் 3 மாதத்திற்குள்ளாகவே படித்து முடிக்க வேண்டும். அடுத்த நான்காவது மாதம்
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாட புத்தகங்கள் மற்றும் DTEd, BEd, MEd பாட புத்தகங்களை படிக்க
வேண்டும். இறுதியாக உள்ள 5 ஆவது மாதத்தில் அனைத்து புத்தகங்களையும் மறுமுறை படிக்கும் போது
நீங்கள் எடுத்த குறிப்புகளை மீள் பார்வை செய்யவும், பயிற்சி புத்தகங்கள் மற்றும் Study Materials இல் உள்ள முக்கிய வினாக்களையும் மீள் பார்வை செய்ய பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
சரி முதல் 3 மாத்தில் எவ்வாறு 6 முதல் 10 ஆம்
வகுப்பு வரையுள்ள பாடங்களை படிப்பது?
ஒரு தலைப்பு குறித்து 6 ஆம் வகுப்பு புத்தகத்தில்
உள்ள கருத்துகளை 15 நிமிடமும், அடுத்தடுத்த 7 முதல் 10 வகுப்பு வரையுள்ள புத்தகங்களை
படிக்க நேர விகிதத்தை அதிகரித்துக்கொண்டே செல்லலாம்.
90 நாட்கள் / 15 புத்தகங்கள் = 6 நாட்கள்.
சிறிய வகுப்புகளில் உள்ள புத்தகங்களை நீங்கள் வேகமாக படித்து முடித்தால் அந்த நாட்களை
9 மற்றும் 10 ஆம் வகுப்பில் உள்ள புத்தகங்களை ஆழந்து படிக்க பயன்படுத்தி கொள்ள முடியும்.
இதேபோன்று அடுத்தடுத்த வகுப்பு புத்தகங்களை படிப்பதற்கும் தேவையான நாட்களை முதலிலேயே
திட்டமிட்டு அதற்கேற்ப படியுங்கள்.
இறுதியாக தன்னம்பிக்கை அவசியம். 12 ஆம் வகுப்பு
வரை படித்து மேற்கொண்டு ஆசிரியர் பயிற்சி 2 வருடமோ அல்லது கல்லூரியில் 3 வருடம் மற்றும்
கல்வியியல் பட்டம் 1 வருடமோ பயின்ற பிறகும் இவர்களுக்கு 8 ஆம் வகுப்பு வரையுள்ள கேள்விகளுக்கே
விடை தெரியவில்லை என்ற Media மற்றும் பொதுமக்களின் ஏளனத்தை மனதில் ஏற்றி வெறி கொண்டு படித்தால் வெற்றி
நிச்சயம்!
நேர மேலாண்மை மிக முக்கியம். இப்போதிருந்தே அடுத்த
தகுதித்தேர்வுக்கு தயார் ஆகுங்கள். குறைந்தபட்ச தகுதி 90 மதிப்பெண் நமக்கு அவசியம் இல்லை. 120 மதிப்பெண்ணுக்கு
மேல் பெறுவதே குறைந்தபட்ச இலக்கு என கருதி படித்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.
குறிப்பாக
நம் பாடசாலை வாசகர்கள் அனைவரும் இங்கு கூறியுள்ள கருத்துகளை பின்பற்றி கடினமாக உழைத்து
வெற்றி பெற்ற பிறகு நம் வலைதள Comment Box இல் "TET இல் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் சேர்ந்து விட்டதாக" தகவல் தெரிவித்தீர்கள் என்றால் அது தான்
எங்களுக்கு மிகவும் சந்தோசத்தை தரும்.
இளைய ஆசிரியர் சமூகத்தை இனிதே வரவேற்கிறோம்.
நன்றி!
அன்புடன்
– பாடசாலை!
இக்கட்டுரை குறித்த உங்கள் Comment ஐ கீழே பதிவு செய்யவும்.
Valuable advice. Thank you
ReplyDeletethank Q
ReplyDeleteஜனவரி 10க்குள் முதுகலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு?
ReplyDeleteபுதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமனகலந்தாய்வு வரும், ஜனவரி 10ம் தேதிக்குள், நடத்தப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட, 2,308 முதுகலை ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒருமுறை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 24ம் தேதி நிலவரப்படி, தகுதியற்ற, 18 பேர், தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை, டி.ஆர்.பி., வட்டாரங்கள் உறுதிப்படுத்தின. இவர்கள் அனைவரும், தேர்வுப் பட்டியலில் இருந்து, நீக்கப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட 2,308 பேரின் சான்றிதழ்களும் சரிபார்த்த பின், மொத்தம் எத்தனை பேர், தகுதியற்றவர்கள் என்ற விவரம் தெரியவரும். இதற்கிடையே, தகுதியான தேர்வர்களைப் பற்றிய விவரங்களை, கல்வித்துறைக்கு அனுப்பும் பணியை, டி.ஆர்.பி., ஆரம்பித்துள்ளது.
அனைவரது விவரங்களும், கல்வித்துறைக்கு வந்துசேர, மேலும் ஓரிரு நாட்கள் பிடிக்கும் எனவும், அதன்பின், ஜன.,10க்குள், "ஆன்-லைன்" கலந்தாய்வு வழியில், பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக ஆட்சியில் முறைகேடு இல்லாமல் 55 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
ReplyDeleteசென்னை : திமுக ஆட்சியில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் முறைகேடு, குளறுபடி இல்லாமல் நியமனம் செய்யப்பட்டார்கள். ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படி இல்லை என்று கருணாநிதி கூறியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2001,2006ல்அதிமுக ஆட்சியில் 45 ஆயிரத்து 987 ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில், அதாவது
அவர்கள் பெறவேண்டிய ஊதியத்தில் ஏறத்தாழ 3ல் ஒரு பங்கு ஊதியம் மட்டுமே பெறும் நிலையில் நியமிக்கப்பட்டிருந்தவர்களுக்கு எல்லாம், 2006ல் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் காலமுறை ஊதியம், அதாவது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தைவிட 3 மடங்கு அதிக ஊதியம் கொடுத்து ஆசிரியர்களை மகிழச் செய்தது.
அத்துடன் 2006க்குப் பின், தொடக்கக் கல்வித் துறையில் 12 ஆயிரத்து 426 இடைநிலை ஆசிரியர்கள், 14 ஆயிரத்து 115 பட்டதாரி ஆசிரியர்கள் என 26 ஆயிரத்து 541 ஆசிரியர்களும், பள்ளிக் கல்வித் துறையில் 70 இடைநிலை ஆசிரியர்கள், 17 ஆயிரத்து 45 பட்டதாரி ஆசிரியர்கள், 4 ஆயிரத்து 665 ஆசிரியர் பயிற்றுநர்கள், 3002 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்,525 தமிழாசிரியர்கள், 1131 சிறப்பா சிரியர்கள், 140 தொழில் ஆசிரியர்கள், 1686 கணினி ஆசிரியர்கள் என 27 ஆயிரத்து 739ஆசிரியர்களும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 216 விரிவுரையாளர்களும், 32 முதுநிலை விரிவுரையாளர்களும் என மொத்தம் 55 ஆயிரத்து 53 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள் திமுக ஆட்சியில்.
இவர்கள் தவிர, ஆசிரியர் அல்லாத 1140 பணியாளர்களும், கருணை அடிப்படையில் 449 பணியாளர்களும், அரசு மேல் நிலைப் பள்ளிகளில் விவசாயம் கற்பிக்க 176 விவசாயப் பயிற்றுநர்களும் நியமிக்கப்பட்டார்கள். 2006 முதல் 2010 வரை நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் ஆசிரியர் கல்வித் தகுதி பெற்ற 1114 மாற்றுத் திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் ஆசிரியர்களாக அரசுப் பள்ளிகளில் நியமிக்கப்பட்டார்கள்.
திமுக ஆட்சிக் காலத்தில் இத்தனை பேர் நியமிக்கப்பட்டார்களே, அப்போது ஏதாவது புகார்கள் வந்ததுண்டா? ஏதாவது முறைகேடு சொன்னதுண்டா? ஏதாவது குளறுபடிகள் நடந்ததுண்டா? ஆனால் இப்போது அதிமுக ஆட்சியில் என்ன நிலைமை? இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் தேர்வில் நடந்த, குளறுபடிகளைத் தொடர்ந்து, முதுகலை ஆசிரியர் தேர்விலும் பெரும் குளறுபடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடல் தகுதி நன்றாக இருப்பவர்கள் பலர், ஊனமுற்றோர் பிரிவில் தேர்வாகி உள்ளனர். சரியான கல்வித் தகுதி இல்லாதவர்களும் இறுதிப் பட்டியலில் தேர்வாகி உள்ளனர் என்று செய்தி வருகிறது.
இறுதி நேரத்தில் சற்று அவசரமாக இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டதால் மீண்டும் பட்டியல் சரிபார்க்கப்பட்டது; மற்றுமொரு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக இன்னொரு செய்தி வந்துள்ளது. நாம் கேட்பதெல்லாம் சான்றிதழ்களை சரிபார்க்காமல் கூட எதற்காக அவசர அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன? அதனால் எந்த அளவிற்கு குழப்பங்கள், குளறுபடிகள்?
விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் 36 ஆசிரியர்களுக்கு மட்டுமே நேரடியாகப் பணி நியமன ஆணையினை வழங்க, ஏனையோர்க்கு மற்றவர்கள் பணி நியமன ஆணையினை வழங்கினாராம். 13ம் தேதி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட போதிலும், வழக்கமாக பணி நியமன ஆணைகள் வழங்குவதற்கு முன்பு, பலமுறை அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகே, ஆணைகள் வழங்கப்படும். ஆனால் இந்த முறை நேரம் இல்லாத காரணத்தால், சான்றிதழ்கள் சரி பா£க்கப்படும் பணிகளை நிறைவேற்றாமல் பணி நியமன ஆணைகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டுவிட்டன.
பணி நியமன ஆணைகள் வழங்கி விட்டு சான்றிதழ்களைச் சரிபார்ப்பதால், அதில் தகுதி இல்லாத வர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களுடைய தேர்வு ஆணையை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற் படும். அடுத்து ஒரு செய்தி. அதாவது 10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் தொடர்பான விவரங்களையெல்லாம் ஆன் லைன் வழியாக ஜனவரி 4ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று ஓர் உத்தரவு. இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளன. 10ம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்கள் சுமார்11 லட்சம் மாணவர்கள் உள்ளனர்.
18 மணி நேரம் மின்வெட்டு. சில பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதிகள் மற்றும் இண்டர்நெட் வசதிகள் இல்லை. இதில் எவ்வாறு ஜனவரி 4ம் தேதிக்குள் மாணவர்கள் தங்களைப் பற்றிய முழு விவரங்களை ஆன் லைன் மூலமாகத் தெரிவிக்க இயலும். இந்தத் தேதியை நீடிக்க வேண்டுமென்று நான் எழுதியிருந்தேன். அதன் பிறகு கூட அரசுத் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.
பள்ளிக் கல்வித் துறை பாழ்பட்டால், பாதிப்புக்குள்ளாவது மாணவர்களின் எதிர்காலம் தான். இன்று வற்றிப் போகும் குளமாகவல்லவா குளறுபடிகளும், குறைபாடுகளும் நிறைந்த பள்ளிக் கல்வித் துறை காட்சியளிக்கிறது. இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
thank u
ReplyDeleteஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு
ReplyDeleteமுக்கிய குறிப்புக்கள்:
* 2011-12ம் கல்வியாண்டிற்கு தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்களுக்கு நியமன ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 31-12-2012 திங்கட்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
* கீழ்க்குறிப்பிட்டுள்ள முன்னுரிமை அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளகாலிப்பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கான கலந்தாய்வு முதலிலும், இதன்பின்னர் இந்த கலந்தாய்வில் சொந்த மாவட்டங்களில் போதுமான காலிப்பணியிடங்கள் இல்லாததால் பணியிடம் கிடைக்கப் பெறாதவர்களும் மற்றும் வேறு மாவட்டங்களில் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கான கலந்தாய்வும் அன்றே தொடர்ந்து அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் நடைபெறும்.
முன்னுரிமை1) கண்பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள்
2) பெண்கள்
3) இதர நபர்கள்
* தங்கள் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவரும் அவர்களுடைய ஆசிரியர் தேர்வுவாரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, கல்விச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களுடன்கலந்தாய்வில் தவறாமல் கலந்துகொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி கணினியை பயன்படுத்தி ஒரே நேரத்தில் அனைத்து பாடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
* நியமன ஆணை பெறும் ஆசிரியர்கள் அனைவரும் 02.01.2013 அன்று பணியில் சேர வேண்டும்
Its Nice Article....
ReplyDeleteIt is very useful for the teachers those who are all waiting with dreams of government job. This guidelines will give life to many teachers working in priv. schools without timing allotment,salary,respect,recognition etc.,
ReplyDeletethank u so much sir
ReplyDeleteIs a biochemistry graduate eligible for TET?
ReplyDeletei am completed PG 2010.NOW I AM STUDING B.Ed Eligible for PG TRB ?
ReplyDeleteTHANK YOU SO MUCH FOR YOUR VALUABLE ADVICE, IT WILL REALLY HELP MANY TEACHERS FOR THEIR PREPARATIONS.
ReplyDeletethanks your advise very useful me
ReplyDeleteThe instructions you have given here are very practical and useful to everyone to win in tntet. Thank you.
ReplyDelete