ஒரு பள்ளி ஆண்டு
விழாவில் நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ள உங்கள் மாணவர்களை தயார் செய்ய வேண்டும்
என்றால் நீங்கள் கீழ்கண்ட காரணங்களை யோசித்து அதற்கேற்ப தயார் செய்ய வேண்டும்.
போட்டி
நடைபெறுவதற்கான காரணம்?
(ஆசிரியார் தின விழாவா? குழந்தைகள் தின விழாவா?, அறிவியல் கண்காட்சியா?)
உதாரணமாக
மாறுவேட போட்டி எனில் போட்டியில் வழங்கப்படும் பரிசுகள் எத்தனை?
மிக
முக்கியமாக கவனிக்க வேண்டியது போட்டியில் பரிசுக்குரியவரை தீர்மானிக்கும் நடுவர் யார்?
( நடுவர் விஞ்ஞானி – எனில் அறிவியல் அறிஞரை போல் வேடமிடலாம்., ஆன்மீகவாதி – எனில் கடவுள்களை
போல வேடமிடலாம்., அரசியல்வாதி – எனில் முதுபெரும் அரசியல் தலைவரை போல வேடமிடலாம்.)
இதுபோன்று
பள்ளி அளவிலான போட்டிகளுக்கு நம் மாணவர்களை தயார்செய்ய வேண்டும்
என்றாலே இத்தனை காரணிகளை நாம் கவனித்து தயார் செய்ய வேண்டியுள்ளது எனில் நம் வாழ்க்கையை
தீர்மானிக்கும் தகுதி தேர்வுக்கு தயார் ஆவதற்க்கு நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும்.
இனி அடுத்த தகுதி
தேர்வு எவ்வாறு இருக்கும் என பார்ப்போம்?
1.
தேசிய அளவிளான தகுதித் தேர்விலேயே 5 முதல் 10 சதவீதம் தான் தேர்ச்சி சதவீதம் இருப்பதால்
கேள்வித்தாள் தயாரிப்பில் எந்த வித சமரசத்துக்கும் இடமில்லை என ஏற்கனவே TRB அறிவித்துள்ளதை கவனிக்க வேண்டும்.
2.
இது ஆசிரியர் தகுதி தேர்வு தானே தவிர ஆசிரியர் பணிநியமன தேர்வு
கிடையாது என நாம் அனைவரும் நன்கு அறிவோம்.
3.
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளிலும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர் மட்டுமே
பணிநியமனம் பெற முடியும் என்ற நிலையில் போட்டி அதிகமாக இருக்கும்.
இந்த தேர்விலேயே தகுதி தேர்வில் வெற்றி பெற்ற
அனைவருக்கும் பணிநியமனம் கிடைக்குமா? இல்லையா? என்ற பயம் இறுதிநாள் வரை பெரும்பாலோருக்கு
இருந்த நிலையில் அடுத்த முறை எவ்வளவு பணியிடங்கள் காலி ஏற்படும்? அப்பணியிடங்கள் அனைத்துக்கும்
ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்களா? என எண்ணிப்பார்க்க வேண்டும்.
தகுதி தேர்வு என்றால் எப்படி இருக்கும் என தெரியாத நிலையில் 0.3 சதவீதம் தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் அடுத்த மறுதேர்வில்
3 சதவீதத்திற்கும் அதிகமான தேர்வர்கள் வெற்றி பெற்றுள்ளனர். எனவே அடுத்த ஆண்டு ஏப்ரல்
அல்லது ஜுலை மாத தேர்வில் தற்போதைய நிலையை விட அதிகமான தேர்வர்களே வெற்றி பெறுவார்கள்
என ஊகித்தறிய இயலும்
குறைவான பணியிடங்கள், அதிகமானோர் தேர்ச்சி
பெறும் நிலையில் தகுதி தேர்வில் தேர்ச்சி மட்டும் போதாது. மிக அதிக மதிப்பெண் பெற்று
தேர்ச்சி பெற வேண்டும் என்பதை மனதில் கொள்ளவும்.
yes this is true. even though i am supporting employment seniority , now we don't have no other choice than preparing for TET. so, everyone please prepare for the next TET and get success.
ReplyDeleteடிச.27-ல் சென்னையில் பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்களின் மாநிலந் தழுவிய பேரணி
ReplyDeleteபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் வருகிற டிச.27-ம் தேதி மாநிலம் தழுவிய பேரணி நடைபெறும் என தமிழ்நாடு பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் கி.ரத்தினக்குமார் தெரிவித்தார்.சிதம்பரத்தில் செய்தியாளர்களிடையே இன்று அவர் தெரிவித்தது: பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு முறையை ரத்து செய்து, தொடர்ந்து பதிவு மூப்பு அடிப்படையிலேயே பணி நியமனம் செய்ய வவேண்டும். 2010-ம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட சுமார் 24 ஆயிரம் பிஎட் பட்டதாரிகளில் நான்குகட்டமாக பணி நியமனம் அளித்தது போல, மீதமுள்ள சுமார் 8100 பிஎட் பட்டதாரிகளுக்கும் அப்போது அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள அரசாணைகளை கொண்டு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளைவலியுறுத்தி வருகிற டிச.27-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்திலிருந்து மாநிலந் தழுவிய பேரணி புறப்படுகிறது. பேரணி முடிவில் தலைமைச் செயலகத்தில் முதல்வரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இப்பேரணியில் மாநிலம் முழுவதிலிமிருந்து சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்