கடந்த
மே 2012ல் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தேர்வு
வாரியத்தால் நடத்தப்பட்ட போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் இரட்டை பட்டம்
(Double Degree) பயின்றதன் காரணமாக பல ஆசிரியர்களுக்கு பணிநியமனம்
வழங்கப்படவில்லை.
இவர்கள் ஏற்கனவே
பயின்ற ஒரு இளங்கலை பட்டத்தின் அடிப்படையில் வேறொரு ஒரு இளங்கலை பட்டத்தை
முடித்து அதன் அடிப்படையில் முதுகலை பட்டத்தை முடித்தவர்கள். முதல் மற்றும்
இரண்டாம் தேர்ச்சிப்பட்டியலில் இவர்களை "SELECTED" என்று குறிப்பிட்ட
போதும் கடைசி தேர்ச்சி பட்டியலில் "NOT SELECTED" என தேர்விக்கப்பட்டது,
இதனால் பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் பெரும் வேதனைக்கு உள்ளாகினர்.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அனுகியபோது,
"உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இரட்டை பட்டம் பயின்றோருக்கு பணி வழங்க
இயலாது" என விளக்கமளித்ததால், இதனால் பலர் நீதிமன்றத்தை அனுகினர்.
இந்நிலையில்
பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 5 பதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஒன்றிணைந்து
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 21.12.2012 அன்று இவ்வழக்கின்
விசாரணை தொடங்கியது. தாங்கள் போட்டித்தேர்விற்கான விண்ணப்பம் அளித்தபோது
இரட்டை பட்டம் பணிநியமனத்திற்கு தகுதியுடையது என்று தகவல்
அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியமும் உயர்கல்வி
ஆணையமும் தகவல் அளித்ததையும், 100க்கும் மேற்பட்ட ஆவணங்களையும் மனுதாரர்
தரப்பில் அளிக்கப்பட்டது. மேலும் "TAMILNADU HIGHER EDUCATION COUNSEL"
இரட்டை பட்டங்கள் பணிநியமத்திற்கு தகுதியுள்ளது என சான்றளித்ததற்கான
சான்றுகளையும் சமர்பித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து
வழக்கு தொடுத்துள்ள 5 ஆசிரியர்களுக்கும் 5 பணி இடங்களை தற்காலிகமாக
ஒதுக்கியும் இப்பணியிடங்கள் ஏற்கனவே விசாரணையில் இருக்கும் அனைத்து முதுகலை
ஆசிரியர் நியமனம் தொடர்பான இறுதித்தீர்புக்கு உட்பட்டது என்றும்,
இடைப்பட்ட காலத்தில் இணையவழி கலந்தாய்வு நடைபெற்றால் இவர்களை பங்கேற்க
அனுமதிக்கலாம் என்றும். இதுகுறித்து விளக்கத்தினை 15 நாட்களுக்குள்
அளிக்க அரசுக்கும் கல்வித்துறைக்கும் உயர்நீதி மன்றநீதிபதி
திரு.வெங்கடராமன் உத்தரவிட்டார்.
pg counselling date nalai veliyagum yana yathir parka padugirathu.9677344345
ReplyDeletepg counselling nex day .dinnamalar news.8098016090
ReplyDeletetoday dinamalar news confusing me. another final list will be publish few days later.appadina eppa tan posting koduppanga.
ReplyDelete