ஆசிரியர் தகுதி தேர்வு முறையை கைவிட வேண்டும்'
என, தமிழக ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. கோவை தாமஸ் கிளப்பில்,
தமிழக ஆசிரியர் கூட்டணி சிறப்பு பொதுக்குழு கூட்டம், மாவட்ட தலைவர்
சம்பத்குமார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், மாவட்ட, மாநில நிர்வாகிகள்
பேசினர். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஒரு நபர்க்குழு ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக
ஏற்படுத்தப்பட்ட மூன்று பேர் கொண்ட குறைதீர் குழுவின் அறிக்கையை வெளியிட
வேண்டும். மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதிய மாற்றத்தை,
மாநில இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வு
நடத்துவதை ரத்து செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலக பதிவு
முன்னுரிமைப்படி ஆசிரியர்களை நியமனம் செய்து, கல்வி உரிமை சட்டப்படி ஐந்து
ஆண்டுகளுக்குள், அவர்கள் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு நிபந்தனை
விதிக்கலாம்.
ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி
பெற்றவர்களுக்கு "வெயிட்டேஜ்' மதிப்பெண்ணை கணக்கில் கொண்டு, 40 மதிப்பெண்
வழங்குவதை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, வேலைவாய்ப்பு அலுவலக பதிவு முன்னுரிமைபடி
நியமனம் செய்ய வேண்டும், தகுதி தேர்வு முறையை கைவிட வேண்டும். ஒன்று முதல்
4ம் வகுப்பு வரையிலும் செயல்வழி கற்றல் முறையை கைவிட்டு, பாடப்புத்தகத்தை
கொண்டு, பாடம் நடத்துவதற்கு பள்ளிக் கல்வி துறைக்கு உத்தரவிட வேண்டும்.
முப்பருவ தேர்வு முறையில், செய்முறை மதிப்பிடல் முறையை கைவிட வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
"ஆன்-லைன்' முறைக்கு வரவேற்பு
அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர்
சங்கங்களின் கூட்டமைப்பின், அகில இந்திய செயலாளர் அண்ணாமலை கூறுகையில்,
""பள்ளி கல்வித்துறைக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, 40
ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களை நியமனம் செய்யப்படுகின்றனர்.
முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி
ஆசிரியர்கள்,சிறப்பு ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனங்களை "ஆன்-லைன்'
மூலம், ஊழலற்ற முறையில் நியமனம் செய்யும் அரசின் கொள்கை முடிவுக்கும், பதவி
உயர்வை "ஆன்-லைன்' முறைப்படுத்துவதற்கும் முதல்வருக்கு நன்றி
தெரிவிக்கிறோம்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...