பல்வேறு தடைகளை தாண்டி சென்ற செவ்வாய்கிழமை
அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் இறுதி தேர்வு
பட்டியல் வெளியிட்டது.
கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலையில் முதல்வர்
விழாவில் தற்காலிக நியமன ஆணை பெற்று சனி அல்லது ஞாயிறு கலந்தாய்வு
நடத்தப்பட்டு 17.12.2012 அன்று பிற ஆசிரியர்களுடன் பணியில்
சேர்ந்துவிடுவோம் என்று எண்ணி இருந்த வேலையில் அமைச்சர் மற்றும்
அதிகாரிகளின் அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கலந்தாய்வு
தற்பொழுது இல்லை என்றும் அதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்
என்றும் அறிவித்துவிட்டு சென்றனர். ஆனால் ஆறு மாத காலம் தனியார் பள்ளியில்
பணி இழந்து வாடும் ஆசிரியர்களின் குடும்ப சூழ்நிலையை எண்ணி பாதிக்கப்பட்ட
ஆசிரியர்கள் இன்னும் எத்தனை மாத காலம் வேலையில்லாமல் தவிக்க வேண்டும் என
தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்
ஒருவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...