பேருந்து படிக்கட்டுகளில், மாணவர்கள்
பயணித்தால், அவர்களின் பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தெரிவிக்க
வேண்டும். அதுவே, அடுத்தடுத்து நீடித்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து
விட்டு, அந்த மாணவர்களை, பள்ளி, கல்லூரிகளில் இருந்து நீக்கலாம்" என சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 10ம் தேதி, சென்னை, பெருங்குடி அருகில்,
கந்தன்சாவடி உள்ளது. மாநகர போக்குவரத்து பேருந்து, சாலையில் வந்து
கொண்டிருந்த போது, செங்கல் லாரி, பின்னோக்கி வந்து மோதியது. இதில்,
பேருந்தின் பின்புற படிக்கட்டில் பயணித்த மாணவர்கள், நான்கு பேர், உடல்
நசுங்கி இறந்தனர்.
இச்சம்பவம் குறித்து, தானாக முன்வந்து, தலைமை
நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல் பெஞ்ச்" வழக்கை விசாரணைக்கு
எடுத்தது. அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அரசு பிளீடர்
வெங்கடேஷ் ஆஜராகினர். போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர்,
போக்குவரத்து துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.
அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல்
பெஞ்ச்" பிறப்பித்த உத்தரவு: தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப்
போகிற நடவடிக்கைகள்,போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல்,
படிக்கட்டுகளில் பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும்
வகையிலும் இருக்கும்.
இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும்,
"டிவி" சேனல்களிலும், விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என நாங்கள்
வலியுறுத்துகிறோம். பஸ் படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள்,
சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என,
பள்ளி, கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின் பெற்றோருக்கு தெரியப்படுத்த
வேண்டும்.
எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது
தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும்
பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த மாணவன்,
இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது
பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க நடவடிக்கை
எடுக்கலாம்.
இந்த வழக்கு, ஜனவரி 2ம் தேதிக்கு,
தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி,
அன்று, போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர்,
அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, "முதல் பெஞ்ச்"
உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...