மதுரை மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட ஒதுக்கீடு கவுன்சிலிங், நேற்று இரவு 12 மணியை கடந்தும், தொடர்ந்தது.
ஆசிரியர் தகுதி தேர்வில் மதுரை மாவட்டத்தில் 391 பட்டதாரி ஆசிரியர்கள்
தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு டிச.,9 ல், மாநகராட்சி இளங்கோ பள்ளியில்
கவுன்சிலிங் துவங்கியது. முதல் நாளில், 92 பேருக்கு பணியிடம்
ஒதுக்கப்பட்டது. 2வது நாளான நேற்று, 200 பேருக்கு பாடங்கள் வாரியாக
பணியிடம் ஒதுக்க வேண்டியிருந்தது.
ஆனால், இரவு 7 மணி வரை 100 பேருக்கு மட்டுமே, பணியிடம்
ஒதுக்கியிருந்தனர். இன்று, இடைநிலை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் துவங்க
உள்ளதால், எஞ்சியுள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங், நேற்று
முடிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...