அரசு பள்ளிகளின் அரையாண்டு விடுமுறையில்
மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு பள்ளிகளில்
அரையாண்டுத் தேர்வுகள், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதி முடிந்து,
ஜனவரி 1ம் தேதியிலிருந்து, விடுமுறை ஆரம்பிக்கும். விடுமுறை முடிந்து, 21ம்
தேதி அரசு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
இந்நிலையில், அரசு பள்ளிகளின் வேலை நாட்களை
கூடுதலாக்கும் நல்ல நோக்கத்தில், அரையாண்டு விடுமுறையை குறைக்க, பள்ளிக்
கல்வித்துறை திட்டமிட்டது. இதன்படி, ஜனவரி 2 முதல் 11ம் தேதி வரை அரசு
பள்ளிகள் இயங்கும். ஜனவரி 12ம் தேதி முதல், 20ம் தேதி வரை மட்டும்
அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என, முடிவு செய்யப்பட்டது.
விடுமுறை குறைப்புக்கு சில சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், ஏற்கனவே இருந்தவாறு, ஜனவரி 1ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை விடுமுறை விட முடிவு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து, ஜனவரி 21ம் தேதி, அரசு பள்ளிகள் வழக்கம் போல திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

puducherry matduma!!!! tamilnadu school leavaaa!!!!
ReplyDelete