இந்தியாவிலுள்ள மொபைல் போன் பயன்பாட்டாளர்கள்
அடுத்த வருடம் முதல் ரோமிங் கட்டணம் கட்ட தேவையில்லை என்று மத்திய தகவல்
ஒளிபரப்பு துறை மந்திரி கபில் சிபல் என்று கூறினார். இதுகுறித்து அவர்
நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
தகவல் தொடர்பு துறை கொள்கை 2012-ன் படி 'ஒன்
நேசன் - பிரீ ரோமிங்' என்ற குறிக்கோளை நடைமுறைப் படுத்துவோம் என்று
முன்னதாகவே சொல்லியிருந்தோம். நாடு முழுவதும் ஒரே போன் நம்பரை
பயன்படுத்துவதற்கு ரோமிங் கட்டணம் கட்ட வேண்டும் என்ற நடைமுறையை நீக்குவது
தொடர்பான கொள்கைக்கு கடந்த மே மாதமே எங்கள் துறை ஒப்புதல் அளித்து விட்டது.
அதன் படி 2013-ம் ஆண்டு முதல் ரோமிங் கட்டணம்
கட்ட வேண்டிய அவசியம் இருக்காது. இதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல்
அளிக்கும். அதன் பிறகு இந்த சலுகை நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...