டி.என்.பி.எஸ்.சி., பணி நியமனத்தில், பெண்கள் பிரிவில் ஒரு இடத்தை காலியாக வைக்க, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சுஜாதா,38, தாக்கல் செய்த மனு: டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு, ஜூலை 7 ல், நடந்தது.
நான் தட்டச்சர் பணிக்கு தேர்வு எழுதினேன். பிற்பட்ட சமுதாயதத்தை சேர்ந்த நான், 300ல், 198 மதிப்பெண் பெற்றேன். பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், "கட்-ஆப்' மதிப்பெண், 193.50 நிர்ணயிக்கப்பட்டது. நான், அதைவிட அதிகம் பெற்றுள்ளேன். கவுன்சிலிங், டிச.,13 முதல் 14 வரை சென்னையில் நடக்கிறது. எனக்கு அழைப்பு வரவில்லை. டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்திற்கு புகார் செய்தேன். மனு மீது நடவடிக்கை எடுக்க, உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில், குறிப்பிட்டுள்ளார். நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்னிலையில், மனு விசாரணைக்கு வந்தது. "" பிற்பட்டோர் பெண்கள் பிரிவில், ஒரு இடத்தை காலியாக வைத்திருக்க வேண்டும்,'' என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஒத்தி வைத்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...