கடந்த 2000ம் ஆண்டுக்கு பின், தமிழ் ஆட்சிமொழி அகராதி வெளி வராததால், அரசுத் துறை தேர்வு எழுதுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, தமிழாசிரியர் கழகத்தினர் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து
மாநில நிர்வாகி இளங்கோவன் கூறுகையில், "கடந்த 1957 முதல் 2000ம் ஆண்டு
வரை, 6 தமிழ் அகராதிகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்பிறகு 12 ஆண்டுகளாக
புதிய அகராதி வெளிவரவில்லை. தற்போது நடத்தப்படும் டி.என்.பி.எஸ்.சி., உட்பட
அரசு துறை தேர்வுகளில், தமிழ் அகராதிகளில் இருந்து, கேட்கும் சில
கேள்விகளுக்கு, விடை காண முடியவில்லை.
சமீபத்தில், சென்னையில் நடந்த
கலெக்டர்கள் மாநாட்டில் கூட, ஈரோடு பகுதியில் பேசப்படும்,"ஈமு" எனும்
வார்த்தைக்கு யாராலும், விளக்க மளிக்க முடியவில்லை. காரணம், பழைய தமிழ்
அகராதிகளில் "ஈமு" என்ற வார்த்தைக்கு சரியான தமிழ் சொல் இல்லை.
ஒவ்வொரு ஆண்டும், அந்தந்த
வட்டாரத்தில் புதுப்புது தமிழ் வார்த்தைகள் பிறக்கின்றன. இவற்றிக்கு,
தமிழில் சரியான வார்த்தையை கண்டுபிடிக்க முடியாமல், தமிழாசிரியர்கள், அரசு
அதிகாரிகள் திணறுகின்றனர்.
தமிழ் வளர்ச்சி துறையின்
கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழ் அகராதி புத்தகங்களை பொது மக்கள் படிக்க
முடியாத நிலையில், ஆசிரியர் அரசு துறையை சார்ந்தவர்கள் படிக்க,
சம்பந்தப்பட்ட துறையிடம் அனுமதி கடிதம் பெறுதல் என்ற கட்டாய உத்தரவை
தளர்த்த வேண்டும். குறிப்பிட்ட ஆண்டு இடைவெளிக்குள் தமிழ் வளர்ச்சித் துறை
சார்பில், தமிழ் அகராதிகளை வெளியிட வேண்டும்,&'&' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...