வந்தவாசியை அடுத்த சு.நாவல்பாக்கம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில், செவாலியர் விருது பெற்ற திருப்பதி ராஷ்ட்ரீய சம்ஸ்கிருத வித்யாபீட முன்னாள் துணைவேந்தர் என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமியை பாராட்டி அவர் மேலும் பேசியது:
இந்த சிறிய கிராமமான சு.நாவல்பாக்கம் பல்வேறு சிறந்த வேத பண்டிதர்களை பல நூற்றாண்டுகளாக உருவாக்கி வருகிறது. அதில் என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமி மணிமகுடத்தில் வைத்த வைரமாக இந்த கிராமத்துக்கு சிறப்பு செய்திருக்கிறார். இவர் பல்வேறு பாடங்களில் பண்டிதராக இருக்கிறார்.
இந்தியா பல்வேறு மதங்களை உள்ளடக்கிய நாடு. கல்வி மட்டுமே சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துகிறது. ஆசிரியர் அல்லது குரு ஆகியோர்தான் இந்த சமுதாயத்தில் ஆண்களையும், பெண்களையும் சிறந்தவர்களாக மாற்ற கூடிய திறன் படைத்தவர்களாக உள்ளனர். அடுத்தவருக்கு கல்வியை போதிப்பதால் மட்டுமே சிறந்த சமுதாயம் உருவாகாது. தான் கற்பிக்கும் முறைக்கு ஏற்ப தன்னையே முன்னுதாரணமாக கொண்டிருப்பவர்களால் மட்டுமே சமுதாய மாற்றம் ஏற்படும்.
உண்மையான ஆசிரியர் என்பவர் புத்தக அறிவையும் தாண்டி சிந்திப்பவராக இருத்தல் வேண்டும். அப்படிப்பட்ட ஆசிரியரிடம் கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்களாக இருப்பர். அப்படிப்பட்ட ஒரு சிறந்த குருவாக என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமியை பாக்கிறேன்.
அனைத்து மதங்களும் சமதர்மம், அமைதி, சகிப்புத்தன்மை, ஒற்றுமை ஆகியவற்றையே வலியுறுத்துகின்றன. ஆனால் மனிதநேயம் என்பது மதங்களை தாண்டி மனிதர்களிடம் சென்றடைவதாகும். உலகில் சகோதரத்துவமும் அமைதியும் சகிப்புத்தன்மையும் உருவாக நாம் அனைவரும் கைகோர்ப்போம் என்றார் ஆளுநர்.
பின்னர் என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமி ஏற்புரையாற்றினார். முன்னதாக என்.எஸ்.ராமானுஜ தாதாசார்யர் சுவாமி எழுதிய "வியுபத்தி வாதம் பாகம் 2' என்ற நூலினை ஆளுநர் கே.ரோசய்யா வெளியிட திருப்பதி திருமலை தேவஸ்தான செயல் அலுவலர் எல்.வி.சுப்பிரமணியம் பெற்றுக்கொண்டார்.
டாக்டர்கள் கஸ்தூரி, கண்ணன், விழா நிர்வாகி என்.டி.சேஷாத்ரி, கல்லூரித் தாளாளர்கள் பி.முனிரத்தினம், டி.கே.பி.மணி, பா.போஸ், வந்தவாசி ஒன்றியக்குழுத் தலைவர் புனிதவள்ளி குப்புசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...